OPS vs NPS: எதில் அதிக ஓய்வூதிய பலன்கள் உள்ளன? ஊழியர்களுக்கு ஏற்றது எது?

OPS vs NPS: இரு திட்டங்களும் வழங்கும் சலுகைகளை சரிபார்த்து, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு எது சிறந்தது என்பதை இந்த பதிவில் ஆராயலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 21, 2023, 08:56 AM IST
  • பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் என்ன?
  • பழைய ஓய்வூதியத் திட்டத்தின் குறைபாடுகள் என்ன?
OPS vs NPS: எதில் அதிக ஓய்வூதிய பலன்கள் உள்ளன? ஊழியர்களுக்கு ஏற்றது எது? title=

OPS vs NPS: சமீப காலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.  தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் வரும் புதிய ஓய்வூதியத் திட்டம் ஏராளமான நன்மைகளுடன் வந்தாலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இரண்டு திட்டங்களும் அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. 

இருப்பினும், தேசிய ஓய்வூதிய முறையை விட பழைய ஓய்வூதியத் திட்டம் உண்மையில் சிறந்ததா என்ற கேள்வி எழுகிறது. இரு திட்டங்களும் வழங்கும் சலுகைகளை சரிபார்த்து, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு எது சிறந்தது என்பதை இந்த பதிவில் ஆராயலாம். 

பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஓய்வுக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் நிலையான வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது. பழைய ஓய்வூதிய முறையின் கீழ் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீத தொகையையும் அகவிலைப்படியையும் ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். மேலும், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இருமுறை அகவிலைப்படியில் (டிஏ) திருத்தத்தின் பலன்களைப் பெறுகிறார்கள். OPS இன் கீழ் பணம் செலுத்துவதற்கு சேவை ஆண்டுகளில் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுவதில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள்

- மாதாந்திர ஓய்வூதிய வடிவில் வாழ்நாள் முழுவதும் நிலையான வருமானத்தை உறுதி செய்கிறது

- சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுவதில்லை, இதனால், ஊழியர்களின் சுமை குறைகிறது.

- OPS இன் கீழ் ஓய்வூதிய வருமானத்திற்கு எந்த வரியும் விதிக்கப்படாது. 

- ஜி.பி.எஸ்-க்கான தன்னார்வ பங்களிப்புகள் ஓய்வூதிய கார்பஸை உருவாக்க பயன்படுத்தப்படலாம்.

- ஓய்வு பெற்ற பிறகு பெறப்படும் வருமானத்திற்கு வரிவிலக்கு உண்டு.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் குறைபாடுகள்

- பழைய ஓய்வூதியத் திட்டம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மட்டுமே செயலில் உள்ளது.

தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்றால் என்ன?

2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டம், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கானது. இத்திட்டம் தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இருந்தது ஆனால் 2009 ஆம் ஆண்டு 18 வயது முதல் 60 வயது வரையிலான குடிமக்களையும் சேர்த்துக்கொள்ளும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) NPS ஐ செயல்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது. தேசிய ஓய்வூதிய அமைப்பு டயர் I மற்றும் டயர் II கணக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. டயர் I கணக்கில் முதலீடுகளை ஓய்வூதிய வயது வரை எடுக்க முடியாது. அதே நேரத்தில் டயர் II கணக்கு ப்ரீமெச்யூருக்கு முன்கூட்டியே எடுக்க அனுமதிக்கிறது.

மேலும் படிக்க | இண்டிகோ பயணிகள் கவனத்திற்கு... இனி குளிர்பானம் இலவசம்... ஆனால் ஒரு நிபந்தனை!

தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) நன்மைகள்

- வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 CCD (1)ன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளைப் பெறலாம்.

- அரசு மற்றும் அரசு சாரா ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்குகிறது.

- NPS டயர் II கணக்கு அதிக பணப்புழக்கத்தை வழங்குகிறது. ஏனெனில் இதில் தேவைப்படும் போது டெபாசிட்களை திரும்ப எடுக்கலாம்.

தேசிய ஓய்வூதிய முறையின் தீமைகள்

- சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகின்றது. 

- ஓய்வு பெற்ற பிறகு பெறப்படும் வருமானம் வரிக்கு உட்பட்டது.

- நீங்கள் 60 வயதை அடையும் முன் NPS டயர் I கணக்கு நிதியை திரும்ப எடுக்க முடியாது.

National Pension System vs Old Pension Scheme: எது அதிகபட்ச பலன்களை வழங்குகிறது?

NPS மற்றும் OPS இரண்டும் அவற்றுக்கான பலன்களின் தொகுப்புடன் வருகின்றன. இருப்பினும், பிந்தையது ஒரு பெரிய குறைபாட்டைக் கொண்டுள்ளது. இது அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமே பலன்களை வழங்குகிறது. மறுபுறம், NPS அனைத்து குடிமக்களுக்கும் நன்மைகளை வழங்குகிறது.

NPS முதலீடு தனியார் துறை சம்பளம் பெறுபவர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் உதவுகிறது. கூடுதலாக, NPS முதலீட்டாளர்கள் வரிச் சலுகைகளைப் பெற அனுமதிக்கிறது. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதில்லை என்பதுதான் ஓபிஎஸ்-ஐ தனித்து நிற்க வைக்கிறது. ஆகையால் நீங்கள் அரசு ஊழியர் இல்லை என்றால் NPS முதலீடு உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

மேலும் படிக்க | பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம்: 5% வட்டியில் ரூ.2 லட்சம் வரை கடன்! பெறுவது எப்படி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News