EPS Pension: இபிஎஸ் 95 ஓய்வூதியதாரர்களுக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ​​ஒரு முக்கியமான சுற்றறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இதில் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) கிடைக்கக்கூடிய இழப்பீடு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் ஓய்வூதியதாரர்களுக்கு (EPS Pensioners) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது ஓய்வூதியதாரர்களுக்கு மாதத்தின் கடைசி வேலை நாளில் ஓய்வூதியம் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியம் சரியான நேரத்தில் ஓய்வூயதாரரின் கணக்கில் வரவில்லை என்றால், அவர்களுக்கு இழப்பீடும் கிடைக்கும். இந்த புதிய விதியின் கீழ், ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு மாதமும் கடைசி தேதியில் சம்பளம் போல ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். 


EPS-95 Pension Fund: சுற்றறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள்


- ஓய்வூதியம் வழங்கும் செயல்முறை மூலம் ஓய்வூதியத் தொகையை கடைசி வேலை நாளுக்கு முன் ஓய்வூதியர்களின் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. 


- ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 


- ஓய்வூதியம் சரியான நேரத்தில் செலுத்தப்படுவதை உறுதி செய்ய, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அனுப்ப மண்டல அலுவலகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.


Employee Pension Scheme: ஓய்வூதியத்தில் தாமதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும்


புதிய விதியின்படி ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், ஓய்வூதியம் வழங்கும் வங்கி ஓய்வூதியதாரருக்கு ஆண்டுதோறும் 8% வட்டியுடன் நிலுவைத் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த இழப்பீடு தானாகவே பயனாளியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.


EPFO இன் கடுமையான வழிமுறைகள்


இந்த உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட வங்கிகள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அதிரடியாய் உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம், இந்த நாளில் அறிவிப்பா?


EPF Subscribers: ஓய்வூதியத் தகுதி மற்றும் சரிபார்ப்பதற்கான வழிகள்


10 ஆண்டுகள் பணி முடித்த இபிஎஃப் சந்தாதாரர்கள் 58 வயதுக்குப் பிறகு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடதத்க்கது. EPF மற்றும் EPS க்கு பங்களிப்பு செய்யும் ஊழியர்கள் இந்த ஓய்வூதியத்தைப் பெறலாம்.


EPF Balance: PF இருப்பை எவ்வாறு செக் செய்வது?


பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள், தங்கள் இபிஎஃப் இருப்பை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழிகளில் செக் செய்யலாம். 


ஆஃப்லைன்:
- எஸ்எம்எஸ் (SMS): இதற்கு ‘EPFOHO UAN LAN’ (LAN என்பது உங்கள் மொழியின் முதல் மூன்று எகழுத்துகள். தமிழுக்கு TAM என டைப் செய்ய வேண்டும்) என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும். 
- மிஸ்டு கால் (Missed Call): 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்.


ஆன்லைன்


- இபிஎஃப்ஓ இணையதளம் (EPFO Website)
- உமங் செயலி (UMANG App)


இந்தப் புதிய விதி அமலுக்கு வருவதன் மூலம், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் (Pensioners), உரிய நேரத்தில் ஓய்வூதியத்தைப் பெறுவது உறுதி செய்யப்படுகின்றது. மேலும், தாமதம் ஏற்பட்டால் இழப்பீடும் கிடைக்கும்.


மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகைக்கு வட்டி பெறுவது எப்படி? பெண்களே ஜாக்பாட்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ