டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான இந்தியன் ரிசர்வ் வங்கி புதிய விதிகள்: நாட்டில் பெரும்பாலானோர் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துகிறார்கள், இது தொடர்பான பல்வேறு விதிகளில் அவ்வப்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய வங்கியான இந்தியன் ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் நாட்டில் கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் அனைத்து வகையான கார்டுகளின் பாதுகாப்பு மற்றும் அனுபவத்திற்கு மிகவும் முக்கியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெபிட்-கிரெடிட் (Debit - Credit Card) கார்டு வைத்திருப்பவர்கள் இந்த விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்


டூ-ஃபேக்டர் அதென்டிகேஷன் கட்டாயம்
அதே நேரத்தில், மின்னணு அட்டை பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற, இந்தியன் ரிசர்வ் வங்கி அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களையும் டூ-ஃபேக்டர் அதென்டிகேஷன் செயல்முறை மூலம் மட்டுமே தொடர அனுமதிக்கிறது. இதன் கீழ், அட்டைதாரர் கூடுதல் வெரிஃபிகேஷன் செயல்முறைக்கு செல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, யூனிக் பின் அல்லது வன் டைம் பாஸ்வர்ட் மூலம் மட்டுமே உங்கள் பரிவர்த்தனை பாதுகாப்பாக இருக்கும்.


மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: இவர்களுக்கு பழைய ஓய்வூதியம்... வந்தது உத்தரவு


கான்டெக்ட்லெஸ் கார்டு டிரான்ஜெக்ஷன் லிமிட்
இந்தியன் ரிசர்வ் வங்கி, கார்டுதாரர்களுக்கு மற்றொரு வசதியை அளித்து, காண்டாக்ட்லெஸ் கார்டு பரிவர்த்தனைகளின் வரம்பை திருத்தியுள்ளது. இதில், எந்த பின்னையும் உள்ளிடாமல் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5,000 வரை காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்களைச் செய்யலாம். இந்த மாற்றத்தின் மூலம், சிறிய பரிவர்த்தனைகளுக்கான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், அவற்றை மிகவும் எளிதாக்கவும் இந்தியன் ரிசர்வ் வங்கியின் முயற்சியாகும்.


வெளிநாடுகளில் கார்டுகளை பயன்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்படும்
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு இந்தியன் ரிசர்வ் வங்கி சில வரம்புகளை நிர்ணயித்துள்ளது. கார்டுதாரர்கள் தங்கள் விருப்பப்படி சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு கார்டை இயக்குவது அல்லது முடக்குவது மிகவும் முக்கியம். இந்த அம்சத்தின் மூலம், கார்டுதாரர்கள் தங்கள் கார்டுகளை நாட்டிற்கு வெளியே தவறாகப் பயன்படுத்தாமல் பாதுகாக்கப்படுவார்கள்.


ஆன்லைன் ட்ரான்ஜெக்ஷன் அலர்ட்
அனைத்து வகையான கார்டுகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் விழிப்பூட்டல்களை கட்டாயமாக அனுப்புமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்த விழிப்பூட்டல்கள் அனைத்தும் ரியர் டைம் அப்டேட்களாக இருக்க வேண்டும் மற்றும் பரிவர்த்தனை நடந்து முடிந்த 5 நிமிடங்களுக்குள் வாடிக்கையாளர்களை அடைய வேண்டும்.


அக்டோபர் 1 முதல் புதிய விதி 
அக்டோபர் 1 முதல், வங்கித் துறை தொடர்பான விதிகளில் பெரிய மாற்றம் வரப்போகிறது. இதற்கான உத்தரவையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் (சிஓஎஃப் கார்டு டோக்கனைசேஷன்) விதிகளை வரும் 1ம் தேதி முதல் கொண்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
டோக்கனைசேஷன் முறையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, கார்டுதாரர்களுக்கு கூடுதல் வசதிகளும் பாதுகாப்பும் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கார்டு பயன்படுத்துபவர்களின் கட்டண முறையும் மேம்படுத்தப்படுகிறது.


மோசடிகளுக்கு தடை
ரிசர்வ் வங்கி அளித்துள்ள தகவலின்படி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவது முன்பை விட பாதுகாப்பானது என்பதே புதிய விதிகளின் நோக்கமாகும். கடந்த சில நாட்களாக, கிரெடிட்-டெபிட் கார்டுகளில் மோசடி நடப்பதாகப் பல புகார்கள் வந்தன. ஆனால் புதிய விதி அமலுக்கு வந்த பிறகு, இந்த மோசடிகளுக்கு வாய்ப்புகள் மிக குறைவு. ஆன்லைன், பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணப் பரிமாற்றம் இன்னும் மேம்படும். 


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்... இனி ஓய்வூதியம் எக்குத்தப்பாக உயரும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ