அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்... இனி ஓய்வூதியம் எக்குத்தப்பாக உயரும்!

Pension News Update: ஓய்வூதியம் பெறுவோருக்கு அவர்களின் ஓய்வூதியத்தில் ஓர் ஆண்டிற்கு 15 சதவீதம் உயர்வு அளிக்கப்படும் என்ற நற்செய்தியை ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.  

Written by - Sudharsan G | Last Updated : Jul 28, 2023, 07:06 AM IST
  • ஆண்டுக்கு இருமுறை ஓய்வூதியம் உயர்த்தப்படும்.
  • குறைந்தபட்ச வருமான உத்தரவாதச் சட்டம் அங்கு அமலாகிறது.
  • ஓராண்டுக்குப் பிறகுதான் ஓய்வூதியம் பெறுபவருக்கு இந்த உயர்வு கிடைக்கும்.
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்... இனி ஓய்வூதியம் எக்குத்தப்பாக உயரும்! title=

Pension News Update: லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது பல பரிசுகளை வழங்குகின்றன. தற்போது ஓய்வூதியர்களுக்கு மற்றொரு நற்செய்தியை மாநில அரசு கூறியுள்ளது. 

இனி ஆண்டுக்கு இருமுறை ஓய்வூதியம் உயர்த்தப்படும். உங்கள் ஓய்வூதியம் ஜூலை மாதத்தில் 5% மற்றும் ஜனவரியில் 10% (ஓய்வூதிய உயர்வு) அதிகரிக்கும். அதாவது, இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் ஓய்வூதியம் 15 சதவீதம் அதிகரிக்கும், ஆனால் அந்த குறிப்பிட்ட மாநில அரசின் ஊழியர்கள் மட்டும் இதன் மூலம் பயனடைவார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அமலாகும் புதிய சட்டம்

ராஜஸ்தான் அரசு குறைந்தபட்ச வருமான உத்தரவாதச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது என்பதை கவனித்தில்கொள்ள வேண்டும். இந்த சட்டத்தை அமல்படுத்திய அதாவது நாட்டிலேயே முதல் மாநிலமாக ராஜஸ்தான் மாறியுள்ளது. இந்த உத்தரவாதச் சட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் அதிகரிக்கும். இதனுடன் சமூக பாதுகாப்பு ஓய்வூதியமும் உறுதி செய்யப்படும். 

மேலும் படிக்க | டபுள் பணம்.. மக்களுக்கு டபுள் ஜாக்பாட்.. அசத்தும் போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம்

2 தவணைகளில் உயரும்

ஊழியர்களின் ஓய்வூதியம் ஒவ்வொரு ஆண்டும் 2 தவணைகளாக உயர்த்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் 5 சதவீதமும், ஜனவரியில் 10 சதவீதமும் ஓய்வூதியம் உயர்த்தப்படும். ஓய்வூதியம் பெற்று ஓராண்டுக்குப் பிறகுதான் ஓய்வூதியம் பெறுபவருக்கு இந்த உயர்வு கிடைக்கும். அதாவது, 15 சதவீத உயர்வு ஒப்புதல் கிடைத்த நாளில் இருந்து 1 வருடத்திற்குப் பிறகுதான் செய்யப்படும்.

125 நாட்களுக்கு பணிகள்...

இது தவிர, கிராமப்புற நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கூடுதல் வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று மாநில அரசு கூறியுள்ளது. இனிமேல் உங்களுக்கு 25 நாட்கள் கூடுதல் வேலை கிடைக்கும். ஆம், இனி 125 நாட்கள் வேலை செய்ய முடியும்.

வாரியம் அமைப்பு

குறைந்தபட்ச வருமான உத்தரவாதச் சட்டத்தை கண்காணிக்க, தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது, இந்த குழு இந்த திட்டத்தை அவ்வப்போது கண்காணிக்கும். இதில், ஊரக வளர்ச்சி - பஞ்சாயத்து ராஜ் செயலாளர், சமூக நீதி அதிகாரமளிக்கும் துறை செயலாளர், திட்டத்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், சுயராஜ்யம் துறை செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கூடுதல் சுமை 

இதனுடன், குறைந்தபட்ச வருமான உத்தரவாதத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, மாநில அரசுக்கு 2500 கோடி ரூபாய் வரை கூடுதல் சுமை ஏற்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனுடன் ஒவ்வொரு ஆண்டும் செலவினத்துடன் கூடுதலாக சேர்க்கப்படும். மேலும், ராஜஸ்தான் அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அங்கு அமல்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அங்கு காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. எனவே, காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக ஆளும் தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | அசந்து போன அரசு ஊழியர்கள்... மீண்டும் அமலாகிறது பழைய ஓய்வூதிய திட்டம்...?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News