PPF New Rules: இன்று முதல் முக்கிய விதிகளில் மாற்றம்... உங்களுக்கு சாதகமா, பாதகமா? முழுமையான அலசல் இதோ
PPF New Rules: PPF கணக்கு தொடர்பான எந்த விதிகளை அரசாங்கம் இன்று முதல் மாற்றியுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம். புதிய விதிகளால் நீங்கள் பயனடைகிறீர்களா அல்லது பாதிக்கப்படுகிறீர்களா என்பதையும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
PPF New Rules: PPF -இல் முதலீடு செய்துள்ளீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இன்று முதல் பிபிஎஃப் தோர்பான முக்கிய விதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன. நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை சிறுசேமிப்பு திட்டங்களில் இன்று அதாவது அக்டோபர் 1, 2024 முதல் பெரிய மாற்றங்களை செய்துள்ளது. PPF கணக்குகளை நிர்வகிப்பது, சிறார் கணக்குகள், பல கணக்குகளை வைத்திருப்பவர்கள் மற்றும் NRI களுக்கும் புதிய விதிகள் பொருந்தும். PPF கணக்கு தொடர்பான எந்த விதிகளை அரசாங்கம் இன்று முதல் மாற்றியுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம். புதிய விதிகளால் நீங்கள் பயனடைகிறீர்களா அல்லது பாதிக்கப்படுகிறீர்களா என்பதையும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
PPF Account: குழந்தைகளின் PPF கணக்குகள்
குழந்தைகளின் பெயரில் திறக்கப்படும் பிபிஎஃப் கணக்குகள் (PPF Accounts) குறித்து பெரிய அப்டேட் வந்துள்ளது. புதிய விதிகளின் படி, ஒரு நபர் தனது குழந்தையின் பெயரில் PPF கணக்கைத் தொடங்கியிருந்தால், குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் வரை, அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு (Post Office Savings Account) போன்று சம்பந்தப்பட்ட கணக்கிற்கு வட்டி வழங்கப்படும். குழந்தைக்கு 18 வயதானவுடன், பிபிஎஃப் -இன் படி வட்டி வழங்கப்படும். சிலர் தங்கள் பெயரிலும், தங்கள் குழந்தைகளின் பெயரிலும் தனித்தனியாக பிபிஎஃப் கணக்கு தொடங்கியிருப்பது அரசின் கவனத்துக்கு வந்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளின் முதிர்வு காலம், குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்த நாளிலிருந்து தொடங்கும்.
இதனால் பிபிஎஃப் உறுப்பினர்களுக்கு சாதமா பாதகமா?
குழந்தையின் PPF கணக்கில் முன்பு இருந்த அதே வட்டி இனி PPF சந்தாதாரர்களுக்கு கிடைக்காது. PPF இன் வட்டி விகிதம் 7.1 சதவீதம், இதற்கு பதிலாக இப்போது சேமிப்புக் கணக்குக்கான வட்டி கிடைக்கும்.
Primary and Secondary Accounts: முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கணக்குகளில் மட்டுமே வட்டி கிடைக்கும்
சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட பிபிஎஃப் கணக்குகளை நிர்வகிக்கிறார்கள். அதாவது பலர் பல கணக்குகளில் ஆண்டுக்கு தலா ரூ.1.5 லட்சம் முதலீடு செய்கின்றனர். ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் என்ற முதலீட்டு வரம்பிற்குள் இருக்கும் வரை, பல கணக்குகளுக்கு கிடைக்கும் வட்டி கிடைக்கும் என்று புதிய விதியில் தெளிவாக்கப்பட்டுள்ளது. அனைத்து கணக்குகளின் மொத்த இருப்பு ரூ. 1.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், ஏதேனும் இரண்டாம் நிலை கணக்கின் கூடுதல் இருப்பு முதன்மைக் கணக்கில் இணைக்கப்படும். ஆனால் இரண்டாம் நிலைக் கணக்கில் தொகை மீதம் இருந்தால், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக உள்ள பணம் எந்த வித வட்டியும் இல்லாமல் திருப்பி அளிக்கப்படும். மேலும், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கணக்குகள் தவிர, வேறு எந்த கணக்கிற்கும் வட்டி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பிபிஎஃப் உறுப்பினர்களுக்கு சாதமா பாதகமா?
சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பிபிஎஃப் கணக்குகளில் ரூ.1.5 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்கிறார்கள். இதன் மூலம் ஒவ்வொரு கணக்கிற்கும் முன்பு 7.1 சதவீத வட்டி கிடைத்தது. ஆனால், தற்போது புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு இது நடக்காது.
NRI Accounts: NRI கணக்குகளுக்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன
NRI கணக்குகளுக்கான விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. பிபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) முதிர்வு வரை தங்கள் கணக்குகளை பராமரிக்கலாம். ஆனால், செப்டம்பர் 30, 2024 வரை POSA வட்டியை மட்டுமே அவர்கள் பெறுவார்கள். இந்தத் தேதிக்குப் பிறகு இந்தக் கணக்குகளுக்கு படிவம் H இல் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட குடியிருப்பு அளவுகோல்களை பூர்த்தி செய்யாத வரையில் எந்த வட்டியும் அளிக்கப்படாது. PPF கணக்குகள் செயல்பாட்டில் இருக்கும் போது NRI களாக மாறிய இந்திய குடிமக்களை இந்த மாற்றம் முக்கியமாக பாதிக்கிறது.
இதனால் என்ஆர்ஐ பிபிஎஃப் உறுப்பினர்களுக்கு சாதமா பாதகமா?
அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து சென்று கொண்டிருப்பவர்களுக்கு செப்டம்பர் 30, 2024 வரை வட்டி கிடைக்கும். இதற்குப் பிறகு அவர்கள் விதிகளின்படி படிவம் H இல் கொடுக்கப்பட்டுள்ள அளவுகோல்களைப் பின்பற்ற வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ