7வது ஊதியக் குழு, சமீபத்திய புதுப்பிப்பு: நாடு முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அனைத்தும் சரியாக நடந்தால், டிஏ உயர்வுக்கான காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரலாம். ஏஐசிபிஐ குறியீட்டின் சமீபத்திய தரவுகளிலிருந்து, இந்த முறையும் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்படலாம் என்பது தெளிவாகியுள்ளது. இதன் மூலம், ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அதிகரிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில், மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஜூன் 2023 -க்கான ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்களை வெளியிட்டது. ஏஐசிபிஐ குறியீட்டின் ஜூன் மாதத் தரவு மிகச் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மே மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்ணிக்கையில் 1.7 புள்ளிகள் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஏஐசிபிஐ குறியீட்டில் அதிகரிப்பு


மே மாதத்தில் ஏஐசிபிஐ குறியீடு 134.7 புள்ளிகளாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் இது 136.4 புள்ளிகளாக அதிகரித்தது. இதற்குப் பிறகு, மே மாதத்தில் 45.58 சதவீதமாக இருந்த டிஏ உயர்வு மதிப்பெண் ஜூன் மாதத்தில் 46.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் இம்முறையும் டிஏ 4 சதவிகிதம் அதிகரித்து மொத்த அகவிலைபப்டி 46 சதவீதமாக உயரும் என யூகங்கள் கிளம்பி உள்ளன.


ஏஐசிபிஐ குறியீட்டில் இருந்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை மத்திய தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்பட்டு அதிகரிக்கப்படுகின்றன. ஏஐசிபிஐ -யின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்த முறையும் அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


குறியீட்டு விவரங்கள்
- ஜனவரி- 132.8
- பிப்ரவரி- 132.7
- மார்ச்- 133.3
- ஏப்ரல்- 134.2
- மே- 134.7 
- ஜூன் - 136.4 


மேலும் படிக்க | 7th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: கிடைக்கவுள்ளதா டிஏ அரியர் தொகை? இதுதான் காரணமா?


தொடர்ந்து மூன்றாவது முறையாக 4 சதவீத அகவிலைப்படி அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது


தொடர்ந்து மூன்றாவது முறையாக ஊழியர்களின் டிஏ மற்றும் டிஆர் 4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கக் தெரிவிக்கின்றன. எனினும், இம்முறை அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகுதான் தெரியவரும். செப்டம்பர் அல்லது அக்டோபரில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு பற்றி மத்திய அரசு அறிவிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


நிதி அமைச்சகம் அறிவிப்பை வெளியிடும்


பொதுவாக ஜூலை முதலான அகவிலைப்படி உயர்வு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில், அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பகிறது. அதன் பிறகு இது மத்திய நிதி அமைச்சகம் மூலம் அறிவிக்கப்படிகிறது. அதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படியுடன் ஊதியத்தை அளிக்கிறது. அகவிலைப்படி ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. ஜூலை முதலான அகவிலைப்படி உயர்வின் அரியர் தொகையும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றது. 


ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்


அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிப்புடன், ரூ.18,000 அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்களின் டிஏ மாதம் ரூ.720 ஆகவும், ஆண்டுக்கு ரூ.8,640 ஆகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், அடிப்படை சம்பளம் 56,900 ரூபாய் உள்ள அமைச்சரவை செயலாளர் மட்டத்தில், அவர்கள் மாதம் 2,276 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு 27,312 ரூபாய் பெறுவார்கள்.


மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் செய்தி: 46% டிஏ... ஊதிய உயர்வு எவ்வளவு? முழு கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ