SBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் பரிசு: பண்டிகை காலத்தில் கொண்டாட்டம்
SBI Car Loan: கார் வனக்கும் எண்ணம் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி சிறப்பான பரிசை வழங்கியுள்ளது.
State Bank of India: இந்தியாவின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல புதுப்பிப்புகளையும் புதிய வசதிகளையும் வழங்கி வருகிறது. தற்போதும் அப்படி ஒரு மாஸான அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசாக இருக்கும். எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ள பரிசை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். கார் வனக்கும் எண்ணம் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி சிறப்பான பரிசை வழங்கியுள்ளது. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகைக் காலத்தில் (SBI Festive Season) சலுகையைக் கொண்டு வந்துள்ளது. இதன் கீழ் கார் கடன் வாங்குபவர்கள் இனி எந்த செயலாக்கக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
பல ஆயிரம் ரூபாய் சேமிக்கலாம்
இனி, கார் கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள், பல ஆயிரம் ரூபாய் சேமிக்கலாம். பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. இது குறித்த தகவலை எஸ்பிஐ ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது.
இந்த சலுகை குறித்து எஸ்பிஐ ட்வீட் செய்தது
எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (தற்போது X) பக்கத்தில், இந்த முறை வாடிக்கையாளர்கள் தங்கள் பண்டிகை காலத்தை இன்னும் அற்புதமாக மாற்றலாம் என்று எழுதியுள்ளது. வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ மூலம் தங்கள் கனவு காரை வாங்கி கொண்டாடலாம் என எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது.
சலுகை ஜனவரி 31 வரை செல்லுபடியாகும்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) படி, திருவிழா சலுகையின் கீழ் வாங்க்கப்படும் கார் கடனில் வாடிக்கையாளர்களிடமிருந்து செயலாக்கக் கட்டணம் வசூலிக்கப்படாது. எஸ்பிஐ இணையதளத்தின்படி, இந்த சலுகை ஜனவரி 31, 2024 வரை செல்லுபடியாகும்.
வங்கி இப்போது எந்த விகிதத்தில் கடன் வழங்குகிறது?
ஒரு வருட எம்சிஎல்ஆர் எஸ்பிஐ வாகனக் கடனில் வழங்கப்படுகிறது. இது தற்போது 8.55 சதவீதமாக உள்ளது. வங்கி வாடிக்கையாளருக்கு கார் கடனை வழங்கினால், அது குறைந்தபட்ச வட்டி விகிதமாக 8.55 சதவீதத்தை வசூலிக்கும். தற்போது எஸ்பிஐ கார் கடன் 8.80 சதவீதம் முதல் 9.70 சதவீதம் வரை உள்ளது. SBI கடன்களுக்கான வட்டி விகிதங்கள் வாடிக்கையாளரின் CIBIL மதிப்பெண்ணுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கார் கடனுக்கு என்ன ஆவணங்கள் தேவைப்படும்?
- கடந்த 6 மாத வங்கி கணக்கு விவரங்கள்
- 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
- குடியிருப்பு சான்றிதழ் (Address Proof) தேவைப்படும்
- சம்பள சீட்டுடன் படிவம்-16 (Form-16 alongwith Salary Slip)
- கடந்த 2 ஆண்டுகளின் ஐடிஆர் தாக்கல் (ITR Return) விவரம்
- பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம்.
கூடுதல் தகவல்:
கார் கடன் வாங்குவதற்கு முன், வாடிக்கையாளர்கள் கடன் EMI கால்குலேட்டரின் உதவியுடன் பட்ஜெட்டை உருவாக்கி, பின்வரும் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
கார் கடன் வாங்கும் முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:
- முன்கூட்டியே திட்டமிடுங்கள்
- கிரெடிட் ஸ்கோரை கவனித்துக் கொள்ளுங்கள்
- சரியான காரை தேர்வு செய்யவும்
- டவுண்பேமெண்ட் அதிகமாக செய்யவும்
- குறுகிய காலத்திற்கு கடன் வாங்குங்கள்
- சரியான நேரத்தில் EMI செலுத்துங்கள்
மேலும் படிக்க | Post Office ஜாக்பாட் திட்டம்: ஒரு முறை முதலீடு... மாதா மாதம் அசத்தலான வருமானம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ