8th Pay Commission: டிஏ 50%, ஆனால்.... மத்திய அரசு கொடுத்த ஷாக், அதிர்ச்சியில் ஊழியர்கள்
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று அதிர்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
8வது ஊதியக் குழு, சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்கள் கடந்த சில காலமாக முக்கியமான சில கோரிக்கைகளை அரசாங்கத்தின் முன் வைத்து வருகின்றனர். 8 ஆவது ஊதியக்குழிவின் உருவாக்கம் அவற்றில் ஒன்றாகும். 8 ஆவது ஊதியக்குழு கண்டிப்பாக அமைக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. அப்படி நடந்தால் அது ஊழியர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். இதனால் அவர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு இருக்கும். இதற்கான கோப்பு உருவாக்கப்படு வருவதாகவும், இது குறித்த முக்கிய அறிவிப்பை அடுத்த ஆண்டு மோடி அரசு வெளியிடக்கூடும் என்றும் கூறப்பட்டு வந்தது.
8வது ஊதியக் குழு பற்றிய கேள்வி
ஆனால், இந்த நிலையில் இன்று ஊழியர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) விகிதம் ஜனவரி 2024 -க்குள் 50 சதவிகிதம் அல்லது அதற்கும் மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி டிஏ விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. பணவீக்கத்தின் தாக்கத்தை நடுநிலையாக்க, அகவிலைப்படி / அகவிலை நிவாரணம் அடிப்படை ஊதியத்தை விட 50% அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்போது எதிர்காலத்தில் ஊதியத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் முந்தைய ஊதியக் குழு பரிந்துரைத்திருந்தது. அப்படியென்றால், இதைக் கருத்தில் கொண்டு மிக விரைவில் 8வது ஊதியக் குழுவை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதா?
ஷாக் கொடுத்த அமைச்சர்
நிதியமைச்சகத்தின் கூற்றுப்படி, 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான பரிசீலனை எதுவும் தற்போது இல்லை என நிதியமைச்சகம் முன்னர் கூறியது. ஜூலை 25, 2023 அன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "அத்தகைய திட்டம் எதுவும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை" என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறினார்.
"ஜனவரி 2024 முதல் அகவிலைப்படி / அகவிலை நிவாரணம் விகிதம் 50 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், எட்டாவது மத்திய ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு முன்மொழிகிறதா?" என்று ஒரு உறுப்பினர் கேட்ட கேள்விக்கு சவுத்ரி பதிலளித்தார்.
மேலும் படிக்க | IRCTC: ரயிலில் டிக்கெட் புக் பண்ணவே முடியவில்லையா... இதோ இன்னொரு ஈஸி வழி இருக்கு!
கடந்த காலங்களிலும், 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் பரிசீலிக்கவில்லை என்று அரசாங்கம் மறுத்துள்ளது.
“மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, பணவீக்கத்தின் காரணமாக ஏற்படும் பற்றாக்குறையை ஈடு செய்ய அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவை வழங்கப்படுகின்றன. பணவீக்கத்தின் காரணமாக ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தால் ஈடு செய்ய முடியாத தேவைகளை பூர்த்தி செய்ய இந்த அகவிலப்படி அளிக்கப்படுகின்றது. இந்த விகிதங்கள் ஜனவரி 2023 இல் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் 42% ஆக அதிகரிக்கப்பட்டன. தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICIP-IW) அடிப்படையில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை டிஏ / டிஆர் விகிதங்கள் அவ்வப்போது திருத்தப்படும்,” என்று சௌத்ரி கூறினார்.
7வது சம்பள கமிஷன் பே மேட்ரிக்ஸின் மதிப்பாய்வு
Aykroyd Formula அடிப்படையில் 10 ஆண்டுகள் காத்திருக்காமல், மத்திய அரசு ஊழியர்களின் சம்பள மேட்ரிக்ஸை அவ்வப்போது மறுபரிசீலனை செய்யலாம் என்று பரிந்துரைத்த 7வது மத்திய ஊதியக் குழுவின் (CPS) அறிக்கையில் உள்ள 1.22 பாராவை அரசாங்கம் பரிசீலிக்கவில்லையா என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சௌத்ரி, “சம்பளக் குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த விவகாரத்தை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை.” என்று தெரிவித்தார்.
மேலும், 8வது ஊதியக் குழு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “மத்திய அரசு ஊழியர்களுக்கான எட்டாவது மத்திய ஊதியக் குழுவின் உருவாக்கம் குறித்து அரசு தற்போது பரிசீலனையில் இல்லை” என்று கூறினார்.
மேலும் படிக்க | கிரெடிட் கார்ட் பயனாளர்கள் உஷார்! இந்த சேவைகள் இனி இருக்காது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ