EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பெரிய அதிர்ச்சி: வட்டி விகிதம் குறைக்கப்படலாம்
கொரோனா நெருக்கடியின் போது, EPF –லிருந்து மக்கள் ஏராளமாக பணத்தை எடுத்துள்ளனர். இந்த காலகட்டத்தில் பொருளாதார நிலையும் கீழ் நோக்கி சென்றுள்ளது. மேலும் EPF-ல் மக்களின் பங்காளிப்பும் குறைந்துள்ளது.
EPF Interest Rate Cut: இந்த ஆண்டு மற்றொரு அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள தயாராகுங்கள். ஆம்!! 2020-21 ஆம் நிதியாண்டில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் (EPF) வட்டி மீண்டும் குறைக்கப்படவுள்ளது. இது நடந்தால், மாத சம்பளம் வாங்கும் கோடிக்கணக்கானவர்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். கடந்த ஆண்டு வரை வட்டி கிடைக்காதது குறித்து கவலைப்பட்ட EPF சந்தாதாரர்கள் இப்போது இரு மடங்காக பாதிக்கப்படுவார்கள்.
EPF-ல் கிடைக்கும் வட்டி குறையும்
ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, கொரோனா நெருக்கடியின் போது, EPF –லிருந்து மக்கள் ஏராளமாக பணத்தை எடுத்துள்ளனர். இந்த காலகட்டத்தில் பொருளாதார நிலையும் கீழ் நோக்கி சென்றுள்ளது. மேலும் EPF-ல் மக்களின் பங்காளிப்பும் குறைந்துள்ளது.
இதன் காரணமாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO விகிதங்களைக் குறைக்க முடிவு செய்யக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய விகிதங்கள் குறித்து முடிவு செய்ய மார்ச் 4 ஆம் தேதி EPFO மத்திய அறங்காவலர் குழு (CBT) கூடும். தற்போதைய சூழலில், வீதக் குறைப்புக்கள் கண்டிப்பாக இருக்கும் என்றே கருதப்படுகின்றது.
ALSO READ: EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வெளியானது Good News!
வட்டி விகிதங்கள் குறித்த முடிவு மார்ச் 4 ஆம் தேதி எடுக்கப்படும்
2020 நிதியாண்டில் EPFO இன் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. பி.டி.ஐ-யிடம் பேசிய EPFO அறங்காவலர் கே இ ரகுநாதன், மார்ச் 4 ம் தேதி ஸ்ரீநகரில் மத்திய அறங்காவலர் குழு கூட்டம் நடக்கும் என்றும், அவர்களுக்கும் விரைவில் நிகழ்ச்சி நிரல்கள் அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டதாக தெரிவித்தார். எனினும், அவர்கள் பெற்ற மின்னஞ்சலில் வட்டி விகிதங்கள் குறித்து எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை.
7 ஆண்டுகளில் EPF-ல் குறைந்த வட்டி
2020 ஆம் நிதியாண்டில், EPF-ல் 8.5% வட்டி கிடைத்தது. இது 7 ஆண்டுகளில் மிகக் குறைந்த வட்டியாகும். இதற்கு முன்னர் 2013 நிதியாண்டில், EPF மீதான வட்டி விகிதங்கள் 8.5% ஆக இருந்தன. கடந்த ஆண்டு மார்ச் மாதம், EPFO வட்டி விகிதத்தை (Interest Rate) புதுப்பித்தது. முன்னதாக, 2019 நிதியாண்டில், EPF-ல் 8.65% வட்டி கிடைத்தது. 2018 நிதியாண்டில் EPFO 8.55% வட்டி அளித்தது. 2016 ஆ நிதி ஆண்டில் இது 8.8% ஆக இருந்தது. இதற்கு முன்பு, 2014 ஆம் நிதியாண்டில் இது 8.75 சதவீதமாக இருந்தது.
EPFO நாடு முழுவதும் 6 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. 2020 நிதியாண்டில், KYC இல் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வட்டி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு, இப்போது வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால் அது அவர்களுக்கு பெரிய அடியாக இருக்கும்.
ALSO READ: 7th Pay Commission: ஏப்ரல் முதல் மாறுகிறதா உங்கள் PF, Gratuity பங்களிப்பு? விவரம் உள்ளே
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR