இந்திய உணவுக் கழகம்: மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் இலவச ரேஷன் திட்டத்தை நீங்களும் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், இந்த செய்தி உடனடியாக படிக்கவும். ஏனெனில் ரேஷன் தொடர்பாக மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய அப்டேட் குறித்து நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். ஆம், புதிய புதுப்பிப்பின் கீழ், திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS) கீழ் சென்ட்ரல் பூல்லில் இருந்து மாநில அரசுகளுக்கு அரிசி மற்றும் கோதுமை விற்பனை செய்வதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையால் தற்போது ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்களை வழங்கும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களை பாதிக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக அரசுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
இருப்பினும், மத்திய அரசின் இந்த முடிவு குறித்து ஏற்கனவே கர்நாடக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS)  கீழ் ஜூலை மாதத்திற்கான 13,819 டன் அரிசியை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,400 என்ற விகிதத்தில் கர்நாடகா மின்-ஏலம் இல்லாமல் கோரியது. ஆனால் இந்திய உணவு கழகம் (எப்சிஐ) பிறப்பித்த உத்தரவின்படி, 'மாநில அரசுகளுக்கு திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS) கீழ் கோதுமை மற்றும் அரிசி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | இனி இங்கும் 500 ரூபாய்க்கு சிலிண்டர்... ஆளும் கட்சியின் அதிரடி அறிவிப்பு!


இந்த மாநிலங்களுக்கு தொடர்ந்து மலிவான உணவு தானியங்கள் வழங்கப்படும்
திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS) கீழ், வடகிழக்கு மாநிலங்கள், மலைப்பிரதேச மாநிலங்கள் மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,400-க்கு விற்பனை தொடரும்.


கோதுமை இருப்புக்கு வரம்பு நிர்ணயித்த மத்திய அரசு
இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக, கோதுமை விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை கோதுமைக்கான இருப்பு வரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளளது. திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS) கீழ் முதல் கட்டமாக மொத்த நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து 1.5 மில்லியன் டன் கோதுமையை விற்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த வரம்பு 2024 மார்ச் 31 வரை வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய சில்லறை சங்கிலி விற்பனையாளர்களுக்குப் பொருந்தும்.


கோதுமை தவிர திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் அரிசி விற்பனையைத் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அளவு பின்னர் இறுதி செய்யப்படும் என்று சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் கோதுமையின் விலையை குறைக்க அரசு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பயனில்லாமல் இருக்கிறது. இதனால், நிலைமையை கட்டுப்படுத்தவும், வரத்து அதிகரிக்கவும் இருப்பு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது என்று கடந்த 13 ஆம் தேதி சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். அந்தவகையில் மொத்த விற்பனையாளர்களுக்கு 3,000 மெட்ரிக் டன்களும், சில்லறை விற்பனையாளர்களுக்கு 10,000 மெட்ரிக் டன்களும் கையிருப்பு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Post Office சேமிப்பு திட்டங்கள் முக்கிய அப்டேட்: இனி வருமான சான்றிதழ் அவசியம், விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ