ஆண்டு முழுவதும் இலவச ரேஷன்... இன்று முதல் தொடங்குகிறது

81.3 கோடி மக்களுக்கு மாதந்தேறும் 5 கிலோ ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 1, 2023, 10:03 AM IST
  • அமைச்சரவை ஒப்புதலின் பேரில் இத்திட்டம் அமல்.
  • கொரோனா தொற்றுக்கு பிறகு இத்திட்டத்தின் தேவை அதிகரித்துள்ளது.
ஆண்டு முழுவதும் இலவச ரேஷன்... இன்று முதல் தொடங்குகிறது title=

நாடு முழுவதும் 81.3 கோடி மக்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம், புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஜன. 1) முதல் அமலுக்கு வருகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தப்பட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு இது வழங்கப்படுகிறது.  

இதை தொடர்ந்து, முதல் வாரத்தில் ஒவ்வொரு நாளும் மூன்று ரேஷன் கடைகளுக்குச் சென்று மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்குமாறு இந்திய உணவுக் கழகத்தின் (எஃப்சிஐ) பொது மேலாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தினசரி அறிக்கைகள் அவர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய உணவு தானிய சட்டத்தின்படி, ஏழைகளின் இந்தாண்டுக்கான தானிய தேவையை (உரிமையை) இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம் 2020ஆம் ஆண்டில் கொரோனா  தொற்றுநோயை முன்னிட்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மத்திய அரசால் நிறுத்தப்பட்டது. 

மேலும் படிக்க | இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம், சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்

உணவுத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, மத்திய அரசின் உணவுத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா நேற்று முன்தினம் (டிச. 30) அனைத்து மாநில உணவுத் துறைச் செயலர்களையும் சந்தித்து இலவச உணவு தானியங்கள் வழங்குவது குறித்தும், தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அதைத் தீர்ப்பது குறித்தும் ஆலோசித்தார்.

கூடுதலாக, பயனாளிகளுக்கு உணவு வழங்குவதற்காக டீலர்களின் மார்ஜின்களை (ரேஷன் கடை உரிமையாளர்களின்) எவ்வாறு செலுத்துவது என்பது குறித்து அமைச்சகம், மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனா தொற்றை தொடர்ந்து, 6 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியபோது, PMGKAY மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கூறப்பட்டது. இது ஆறு மாதங்கள் தடைபட்டாலும், 2020இல் தொடங்கி 28 மாதங்கள் வரை, அடிக்கடி நீட்டிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் குறிப்பின்படி, PMGKAY தொடங்கப்பட்டதில் இருந்து டிசம்பர் 2022 வரை அதன் ஒட்டுமொத்த செலவு ரூ. 3.91 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆண்டின் முதல் நாளே அதிர்ச்சி அளித்த எல்பிஜி சிலிண்டர் விலை, இல்லத்தரசிகள் ஷாக்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News