சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவதற்கு எப்போது வரை மேல்முறையீடு செய்ய முடியும் என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. திர்காலத் தலைமுறையின் வளர்ச்சிக்கான முதலீடாக தமிழக அரசு கருதும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், கடந்த மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் பயனாளிகளுக்கு பணம் அனுப்பப்பட்டது. அதேபோல் இந்த மாதம் 15ம் தேதி வங்கிகள் விடுமுறை என்பதால், அக்டோபர் மாதத்திற்கான உரிமைத் தொகை (October Installement) ஆயிரம் ரூபாய், ஒரு நாள் முன்னதாகவே அதாவது 14ம் தேதியே பணம் அனுப்பப்பட்டது. அத்துடன் இந்த திட்டத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் 18ம் தேதியில் இருந்து மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் தொடங்கியது. அதில் இருந்து நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு அதற்கான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. இந்த குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்ட சென்ற இருந்து 30 நாட்களுக்குள் இந்த திட்டத்திற்கு மேல்முறையீடு செய்ய வேண்டும். அதாவது 18ம் தேதி எஸ்.எம்.எஸ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும்.


அடுத்தடுத்த நாட்களில் குறுஞ்செய்தி பெற்றவர்கள், குறுஞ்செய்தி பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.  


அரசின் அறிவிப்பு


தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு (TN Government) அறிவித்திருந்தது. அதன்படி தற்போதைய நிலையில் 6 லட்சத்திற்கு மேற்பட்டோர் மேல்முறையீடு செய்துள்ளனர். 


மேலும் படிக்க | ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடரும் மாற்றங்கள்! உலோகன்னாலும் தங்கம் இல்லையா


இந்த மாதம் 15ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால், ஒருநாள் முன்கூட்டியே பயனாளர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டது. 106,48.406 பேருக்கு பணம் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் அடுத்த மாதம் அதாவது நவம்பர் 15ம் தேதி வங்கி விடுமுறை இல்லை என்றாலும்கூட, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகை பணம் முன்கூட்டியே அனுப்பப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரஙக்ள் தெரிவிக்கின்றன.


யாருக்கெல்லாம் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டிருக்கலாம்?


ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ள குடும்ப உறுப்பினர்கள், ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்கள், வருமானத்தின் அடிப்படையில் உரிமைத்தொலை பெற தகுதியில்லாதவர்கள் ஆவர்.


மேலும் படிக்க | MSSC Vs SSY: பெண்களுக்கு ஜாக்பாட் வருமானத்தை அள்ளித்தரும் திட்டம் எது?


ஐந்து ஏக்கருக்கும் அதிகமான நன்செய் நிலங்கள் வைத்திருப்பவர் அல்லது 10 ஏக்கருக்கும் அதிகமான புன்செய் நிலம் வைத்திருப்போர்.
வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தைவிட அதிகமாகப் பயன்படுத்தும் குடும்பங்கள், இது ஓராண்டுக்கான மின்சார அளவீடு என்பது குறிப்பிடத்தக்கது. 


அதேபோல, ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், கைம்பெண்கள் ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது.


தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள்
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள். ஊராட்சி மன்ற தலைவர்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியவர்களும், சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய தகுதி இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | குடும்பத் தலைவிகளுக்கு சர்ப்ரைஸ் -  மாதம் 1000 ரூபாய் - அரசின் திடீர் அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ