National Pension System: என்பிஎஸ் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறை (DoPPW), தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கான உரிமை தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NPS Members


அக்டோபர் 11 ஆம் தேதி இது தொடர்பாக ஒரு அலுவலக குறிப்பாணை வெளியிடப்பட்டது. இதன் படி. NPS-ன் கீழ் உள்ள மத்திய அரசு சிவில் ஊழியர்களின் சேவை தொடர்பான விஷயங்களை நிர்வகிக்க மத்திய சிவில் சேவைகள் விதிகள், 2021 -ஐ (Central Civil ServicesRules, 2021) (தேசிய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல்) திணைக்களம் அறிவித்துள்ளது.


Voluntary Retirement from Government Service: அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு


மத்திய சிவில் சர்வீசஸ் (என்பிஎஸ் அமலாக்கம்) விதிகள், 2021 இன் விதி 12, என்பிஎஸ்-ன் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியரைப் (Central Government Employees) பொறுத்தவரை, பணியில் இருந்து விருப்ப ஓய்வு மற்றும் அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கான உரிமையை வழங்குகிறது.


"என்பிஎஸ்-ன் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர் இருபது ஆண்டுகளுக்கான வழக்கமான சேவையை முடித்த பிறகு, எந்த நேரத்தில் வேண்டுமானாலும், மூன்று மாதங்களுக்குக் குறையாத அறிவிப்பை நியமன அதிகாரிக்கு எழுத்துப்பூர்வமாக அளித்து, பணியில் இருந்து ஓய்வு பெறலாம்" என்று அலுவலக குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், மேற்படி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கால அவகாசம் முடிவடைவதற்கு முன்னர் பணி ஓய்வுக்கான அனுமதியை வழங்க நியமனம் செய்யும் அதிகாரி மறுக்காத பட்சத்தில், குறித்த காலக்கெடு முடிவடைந்த நாளிலிருந்து ஓய்வூதியம் (Pension) நடைமுறைக்கு வரும் என அதில் மேலும் கூறப்பட்டுள்ளது. எனினும், பணியாளர் நியமன அதிகாரிக்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை (Written Notice) வழங்க வேண்டும்.


மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு அட்டகாசமான அப்டேட்: 20-100% அதிகரிக்கிறது ஓய்வூதியம்... யாருக்கு எவ்வளவு?


தன்னார்வ ஓய்வு பெற்றவுடன், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஒழுங்குமுறைகள், 2015-ன் கீழ் கிடைக்கும் பலன்களுக்கு அரசு ஊழியர் உரிமை பெறுவார். இது சூப்பர்ஆனுவேஷனின் போது என்பிஎஸ் சந்தாதாரருக்கு (NPS Subscribers) வழங்கப்படும் ஓய்வூதியத்தை ஒத்து இருக்கும்.


அரசாங்க ஊழியர் (Government Employee) தனது தனிப்பட்ட ஓய்வூதியக் கணக்கைத் தொடர விரும்பினால் அல்லது ஓய்வு பெறும் தேதிக்கு அப்பால் NPS இன் கீழ் பலன்களை வழங்குவதை ஒத்திவைக்க விரும்பினால், அவர் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (தேசிய ஓய்வூதிய அமைப்பின் எக்சிட் மற்றும் வித்ட்ராயல்) ஒழுங்குமுறைகள், 2015 -இன் படி இது தொடர்பான விருப்பத்தைப் பயன்படுத்தலாம்.


பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.


மேலும் படிக்க | CGHS: மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்... 40 தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ