இந்தியன் ரயில்வே: இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயிலில் பயணம் செய்யும் போது பலர் தங்கள் லக்கேஜ்களை ரயிலிலேயே மறந்து விடுவதை அடிக்கடி நாம் பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், அப்படி ரயிலில் தவற விடும் சாமான்கள் பற்றி தெரிய வந்தவுடன், நம்மில் பெரும்பாலானோர், இனி அவை கிடைக்காது, அவ்வளவுதான் என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம். ஆனால் அது தவறு. 


பயணிகள் ரயில்களில் தவறவிட்ட பொருட்களை ரயில்வே கவனித்து, அந்த லக்கேஜை அது யாருக்கு சொந்தமானதோ, அதை விசாரித்து, அவர்களிடம் திருப்பித் தருகிறது. உங்கள் பொருட்களை ரயில்களில் தவற விட்டால், எப்படி அதை திரும்பப் பெறுவது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


தவற விடப்பட்ட பொருட்கள் இங்கு டெபாசிட் செய்யப்படுகின்றன


ரயிலில் தவற விடப்பட்ட பொருட்களை அவற்றின் உரிமையாளருக்கு வழங்குவதற்கு ரயில்வே சரியான விதிகளை உருவாக்கியுள்ளது. முதலில், ரயில் அதன் கடைசி நிலையத்தை அடைந்ததும், முழு ரயிலையும் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில் நிலைய ஊழியர்கள் சோதனை செய்கின்றனர். அந்த நேரத்தில், யாரேனும் ஒரு பயணியின் தவற விடப்பட்ட சாமான் அவர்களுக்கு கிடைத்தால், அந்த லக்கேஜுக்கான ஒரு ரசீதை உருவாக்கி அதை ஸ்டேஷன் மாஸ்டரிடம் சமர்ப்பிக்கிறார்கள்.


மேலும் படிக்க | கழுதை தேஞ்சு கட்டெறும்பா போச்சு... வந்தே பாரத் ரயிலில் மோசமான உணவு - கிழித்து தொங்கவிட்ட பயணி!


தவற விடப்பட்ட பொருட்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுகின்றன


அதன் பிறகு, தொலைந்த லக்கேஜ் பற்றிய விவரங்கள் ஸ்டேஷன் மாஸ்டரால் ஒரு பதிவேட்டில் உள்ளிடப்படும். இதற்குப் பிறகு, அந்த பொருளின் மதிப்பு பதிவு செய்யப்பட்டு, மொத்த பொருட்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் மூன்று பிரதிகள் தயாரிக்கப்படுகின்றன. மூன்று பிரதிகளில், ஒரு நகல் தொலைந்து போன சாமான்கள் பதிவேட்டிலும், இரண்டாவது அந்த சாமான்களிலும், மூன்றாவது நகல் ரயில்வே பாதுகாப்புப் படையிடமும் கொடுக்கப்படுகின்றது. அதன் பிறகு, இழந்த பொருட்கள் சீல் வைக்கப்படுகின்றன.


தவற விடப்பட்ட பொருட்களை இந்த வழியில் திரும்பப் பெறலாம்


தங்கள் தொலைந்துபோன பொருட்கள் பற்றி ஒரு பயணி ஸ்டேஷனில் வந்து ஸ்டேஷன் மாஸ்டரரிடம் கேட்டால், அவர் அந்த பயணியிடம் சில விவரங்களை கேட்டு தெரிந்து கொள்கிறார். பொருட்கள் ஒரே நபருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டால், ஸ்டேஷன் மாஸ்டர் அவற்றை அவரிடம் திருப்பித் தருகிறார். இருப்பினும், இந்த நேரத்தில், இழந்த பொருட்களின் பதிவேட்டில் நபரின் முழு முகவரியும் உள்ளிடப்பட்டு, அந்த நபரின் கையொப்பமும் பெறப்படுகின்றது. இது தவிர, இந்த வசதிக்காக பயணிகளிடம் இருந்து ரயில்வே கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


எத்தனை நாட்களுக்குள் பொருளைப் பெற வேண்டும்?


பயணிகள் தவற விட்ட பொருட்களையும், தொலைந்து போய் கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும் ஏழு நாட்களுக்கு ஸ்டேஷன் மாஸ்டர் தனது மேற்பார்வையில் வைத்திருப்பார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதன் பிறகு அவர் அந்த பொருளை ‘லாஸ்ட் பிராபர்டி அலுவலகத்திற்கு’ அனுப்புகிறார்.


மேலும் படிக்க | IRCTC பயண காப்பீடு... 35 பைசாவில் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு... முழு விபரம் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ