PPF, SSY, பிற சேமிப்பு கணக்குகள் முடக்கப்படலாம்: விதிகளில் அரசு செய்த பெரிய மாற்றம்.. உடனே இதை செய்யுங்கள்
Small Saving Schemes: பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் (SSY), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு PAN மற்றும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிறுசேமிப்பு திட்டங்கள், சமீபத்திய புதுப்பிப்பு: சிறுசேமிப்பு திட்டங்களில் சேமித்துக்கொண்டிருக்கும் நபரா நீங்கள்? அல்லது இத்திட்டங்களில் பணத்தை சேமிக்கும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் (SSY), தபால் நிலைய வைப்புத்தொகை மற்றும் பிற சிறு சேமிப்புத் திட்டங்களில் மிதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை தபால் அலுவலகம் அல்லது வங்கிக் கிளையில் இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த முக்கியமான காலக்கெடுவை தவறவிட்டால் அவர்களின் சிறு சேமிப்பு முதலீடுகள் முடக்கப்படும்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் (SSY), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு PAN மற்றும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சகம் 31 மார்ச் 2023 அன்று இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.
சிறு சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்கு செப்டம்பர் 30 கடைசி நாள்
சிறு சேமிப்பு சந்தாதாரர்கள் பிபிஎஃப், எஸ்எஸ்ஒய், என்எஸ்சி, எஸ்சிஎஸ்எஸ் அல்லது வேறு ஏதேனும் சிறு சேமிப்புக் கணக்கைத் திறக்கும்போது ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்கவில்லை என்றால், செப்டம்பர் 30, 2023 -க்குள் தங்கள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் எண்ணை பதிவு செய்யாத பட்சத்தில், ஒருவரது கணக்கு தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது சிறுசேமிப்பு கணக்கு முடக்கப்படும். ஏற்கனவே உள்ள சந்தாதாரர்கள், கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சிறு சேமிப்புக் கணக்குடன் ஆதார் எண்ணை வழங்கத் தவறினால், அக்டோபர் 1, 2023 முதல் அவர்களது கணக்கு முடக்கப்படும் என நிதி அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகத்தின் அறிவிப்பை இங்கே காணலாம்:
சிறு சேமிப்பு திட்டங்கள் என்றால் என்ன?
சிறு சேமிப்பு திட்டங்கள் தனிநபர்கள் செல்வத்தை சேமிக்கவும், பாதுகாத்து பெருக்கவும் உதவும் முதலீட்டு வழிகள் ஆகும். இவை அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டங்கள். ஆகையால், இவற்றில் குறைந்த அளவு ஏற்ற இறக்கங்களே இருக்கும். இந்தத் திட்டங்களில் பலவற்றில் நீங்கள் செய்யும் முதலீடு வரிச் சலுகைகளுக்குத் தகுதி பெறுகிறது. தகுதியான சில பொதுவான திட்டங்கள் SCSS மற்றும் PPF ஆகும். வருமான வரி (ஐடி) சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை இவற்றில் பலன்களைப் பெறுவீர்கள்.
அரசாங்கம் ஒவ்வொரு காலாண்டிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான விகிதத்தை மதிப்பாய்வு செய்கிறது. அந்த வகையில் ஜூலை-செப்டம்பர் 2023 காலாண்டில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 30 bps உயர்த்தப்பட்டுள்ளன. இந்த திருத்தம் குறிப்பாக 1-ஆண்டு மற்றும் 2-ஆண்டு கால வைப்புத்தொகைகள் மற்றும் 5-வருட தொடர் வைப்புத்தொகைகளுக்கானது.
சிறு சேமிப்புத் திட்டங்களில் ஜூலை-செப்டம்பர் 2023க்கான வட்டி விகிதங்கள்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) - 8.2%
செல்வமகள் சேமிப்புத் திட்டம் (SSY) - 8.0%
NSC - 7.7%
கிசான் விகாஸ் பத்ரா - 7.5%
5 ஆண்டு வைப்பு - 7.5%
PO-மாதாந்திர வருமானத் திட்டம் - 7.4%
PPF - 7.1%
2 ஆண்டு வைப்பு - 7.0%
3 ஆண்டு வைப்பு - 7.0%
1-ஆண்டு வைப்பு - 6.9%
5 ஆண்டு RD - 6.5%
மேலும் படிக்க | எஸ்எம்எஸ் மூலம் புது மோசடி: மக்களே கவனமாக இருங்க..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ