இந்தியாவில் தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து வரும் அதேவேளையில் சைபர் கிரைம் குற்றங்களுக்கும் புதுப்புது வழியில் முளைத்துக் கொண்டிருக்கின்றன. இதற்காக மத்திய அரசு பிரத்யேகமாக சைபர் மோசடிகளைப் புகாரளிக்க இணையதளங்கள் மற்றும் ஹெல்ப்லைன்களை அமைத்துள்ளது. எஸ்எம்எஸ் மூலம் குறிவைக்கும் ஃபிஷிங் மோசடி தான் 'ஸ்மிஷிங்'. வழக்கமாக மின்னஞ்சல் அடிப்படையிலான ஃபிஷிங் மோசடிகளைக் கண்டறிவது எளிது. ஏனெனில் அவை பெரும்பாலும் எழுத்துப் பிழைகளுடன் மோசமாக எழுதப்படுகின்றன. வழக்கத்திற்கு மாறான மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து வந்து அவரை சீரற்ற தகவல்களைக் கொண்டிருக்கும்.
இன்னொருபுறம், எஸ்எம்எஸ் வழியாக அனுப்பப்படும் வங்கி அலெர்ட் மெசேஜ்கள், ஒரு முறை கடவுச்சொற்கள் (OTPகள்) மற்றும் கட்டண URLகள் போன்ற கோரிக்கைகளில் தான் ஸ்மிஷிங் மோசடி பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் செய்தியை அனுப்பும் எண் நம்பகமானதா? என்பதைத் தீர்மானிப்பதும் பெரும்பாலும் கடினம் என்பதால் பலர் இந்த மோசடியில் சிக்கிக் கொள்கிறார்கள்.
E-Challan மோசடி: மக்களே ஏமாற வேண்டாம் - எப்படி தப்பிப்பது?
வங்கிக் கணக்கு மூடப்படுவது அல்லது வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறியதற்காக வருமானவரித் துறையிடமிருந்து அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது, இதனை தவிர்க்க இந்த மெசேஜ்ஜில் இருக்கும் லிங்கை கிளிக் செய்யுங்கள் என்ற மெசேஜ் மொபைலுக்கு அடிக்கடி வரும். இதில் தான் மோசடியாளர்களில் பொறியே இருக்கிறது. இந்த பொறியில் சிக்கினால் ஆபத்து தான். இதில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் 5 விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
1. கிளிக் செய்ய வேண்டாம்: வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகள் தங்களின் சேவைகளை சரிபாரக்கவோ பரிவர்த்தனைகளை செய்யக்கோரி SMS மூலம் லிங்க் அனுப்புவதில்லை. இது குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே எதிர்பாராத SMS-ல் உள்ள எந்த லிங்குகளையும் கிளிக் செய்ய வேண்டாம்.
2. உடனடியாகச் செயல்பட வேண்டாம்: வங்கி அல்லது அரசு துறை சார்ந்து உங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் வருகிறது. எந்த எஸ்எம்எஸில் நீங்கள் இப்போதே இந்த விஷயத்தை செய்ய வேண்டும், இல்லை என்றால் அபராதம் அல்லது சேவை முடக்கப்படும் என்று எச்சரிக்கும் தொனியில் இருந்து, அதில் இருந்து தப்பிக்க நீங்கள் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என இருந்தால் அந்த மெசேஜின் உண்மை தன்மையை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அரசு துறை சார்ந்த மெசேஜாக இருந்தால் நேரடியாக அரசு அலுவலகங்களுக்கு செல்லுங்கள், வங்கி தொடர்புடையதாக இருந்தால் நேரடியாக வங்கிக் கிளைக்கு செல்லுங்கள்.
3. முக்கியமான தகவல்களைப் பாதுகாத்தல்: வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் பிற சேவை வழங்குநர்களை பொறுத்தவரை கார்டு விவரங்கள், OTPகள், வங்கிக் கணக்கு எண்கள், பின்கள் போன்ற முக்கியமான தகவல்களைக் கேட்க மாட்டார்கள். இந்த தகவல்களை கேட்டு உங்களுக்கு ஏதேனும் மெசேஜ் வந்தால் உங்களுக்கு விரிக்கப்பட்ட பொறியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதில் நீங்கள் சிக்க வேண்டாம்.
4. மொபைல் சாதனங்களைத் தவறாமல் புதுப்பிக்கவும்: இன்று ஸ்மார்ட்போன்களில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைத் தடுக்க, உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. உங்கள் சாதனம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்வது கட்டாயம்.
5. அறியப்படாத செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்கவும்: பெரும்பாலான ஸ்மிஷிங் மோசடிகள் அறியப்படாத எண்களிலிருந்து வரும். தெரியாத அல்லது சந்தேகத்திற்குரிய எண்ணிலிருந்து வரும் செய்தி அல்லது அழைப்புகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்கவும். தெரியாத எண்ணிலிருந்து ஒரு சலுகை எவ்வளவு கவர்ச்சியாகத் தோன்றினாலும், நினைவில் கொள்ளுங்கள், அது மோசடியில் சிக்க வைக்கும் பொறி என்று. அதில் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். அல்லது முழு தகவல்களையும் தெரியும் வரை பதில் அளிக்க வேண்டாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ