Senior Citizen Train Ticket Concession: மூத்த குடிமக்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. அவர்களது நீண்ட நாள் கோரிக்கை ஒன்றை பற்றிய சமீபத்திய புதுப்பிப்பு ஒன்று வந்துள்ளது. ரயில்வே மூத்த குடிமக்களுக்கு பயணத்தின் போது ரயில் டிக்கெட்டுகளில் வழங்கப்படும் சலுகையை மீண்டும் கொண்டு வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீண்டும் இந்தக் கோரிக்கையை மக்களவையில் எழுப்பியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த குடிமக்களுக்கான (Senior Citizens) ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கும் முறையை மத்திய அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என சுயேச்சை எம்பி ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜூன் மாலியா ஆகியோர் புதன்கிழமை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். இதன் பிறகு மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகை குறித்து மீண்டும் நம்பிக்கை பிறந்தது. 


மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டணத்தில் சலுகை வேண்டும்


முதியோர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ரயில் கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகையை மீண்டு கொண்டு வர வேண்டும் என்றும் பப்பு யாதவ் தெரிவித்துள்ளார். இது தவிர ரயில்களில் பெண்களுக்கென தனி கழிப்பறைகள் அமைக்க வேண்டும் என்றும், ரயில்களில் ஜெனரல் கம்பார்ட்மெண்டை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


மூத்த குடிமக்களுக்கு மீண்டும் 50 சதவீதம் தள்ளுபடி கிடைக்குமா?


திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜூன் மாலியா, "கொரோனா நொய்தொற்றுக்கு முன்னர் மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி கிடைத்து வந்தது. கொரோனா நோய்த்தொற்று சரியானவுடனும் அதை மீண்டும் கொண்டு வரவில்லை. அதை மீட்டெடுக்கும் எண்ணம் அரசுக்கு இருப்பதாகவும் தெரியவில்லை" என்றார்.


ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பி ஜோபா மஞ்சி தெரிவித்தார்.


மோடி ஆட்சியில்தான் பயணிகளுக்கு இந்த வசதி கிடைத்தது


இது பற்றி பேசிய பாரதீய ஜனதா கட்சியின் ராஜேஷ் மிஸ்ரா, ‘பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில்தான் ரயில்வேயின் நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.’ என்று நம்பிக்கை தெரிவித்தார். ராஷ்டிரிய லோக் தளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சங்வான், ‘இந்த அரசில் ரயில்வே பாதுகாப்பு, தூய்மை, தொழில்நுட்பம் மற்றும் பலவற்றில் பல திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.’ என்றார். உத்தரபிரதேசத்தில் ரயில் சேவைகள் விரிவடைந்துள்ளதாக சங்வான் மேலும் கூறினார். 


பாதுகாப்பு குறித்து துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்


ரயில்வே குறித்த இந்த விவாதத்தில் பங்கெடுத்த காங்கிரஸ் எம்பி மல்லு ரவி, ரயில்வே பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். IUML எம்பி இ டி முகமது பஷீர், ரயில்வே வேலைகளில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான இடஒதுக்கீடு முறையில் உடனடி சீர்திருத்தம் தேவை என்று கூறியுள்ளார். 


மேலும் படிக்க | கட்டண முறைகளில் முக்கிய மாற்றம் செய்த RBI: இனி இந்த வசதி கிடைக்கும்


புதிய ரயில் பாதைகளுக்கான கோரிக்கை


- பாஜகவின் அனுராக் சர்மா, 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த இந்தியாவாக மாற்றும் பிரதமர் மோடியின் இலக்கில் ரயில்வேயின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்தார். 


- ஆந்திராவின் உத்தேச தலைநகரான அமராவதி வரை புதிய ரயில் பாதை அமைப்பதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் அளிக்க வேண்டும் என ஜனசேனா கட்சியின் எம்.பி பாலசோரி வல்லபனேனி கேட்டுக்கொண்டார்.


- சிவசேனா எம்.பி., தைரிஷீல் சம்பாஜிரவே மானே, அரசாங்கத்தை பாராட்டினார். ரயில்வே மேம்பாட்டிற்காக அரசாங்கம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். தனது தொகுதியில், கொரோனா பெருந்தொற்றின் போது மூடப்பட்ட பல்வேறு சிறிய நிலையங்களை மீண்டும் தொடங்குமாறு அவர் கோரினார். 


- சிவசேனா (UBT) உறுப்பினர் அரவிந்த் கன்பத் சாவந்த் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில்வே நிலங்கள் தொடர்பான வலுவான கொள்கைகள் வேண்டும் என கோரினார். ரயில்வே பணிகளுக்காக வீடுகள் இடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு முறையான மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 


நாடாளுமன்ற அமர்வு விவாதத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு, கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதால், மூத்த குடிமக்கள் உட்பட பல பிரிவினருக்கு விரைவில் நல்ல செய்திகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: ஜாக்பாட் ஊதிய உயர்வு, டிஏ ஹைக்... 8வது ஊதியக்குழு என்ன ஆனது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ