பெங்களூரு: பெங்களூருவில் தற்போது தீவிர போக்குவரத்து விதிகள் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் ஒரு படி மேலாக இது வரை 50க்கும் மேற்பட்ட வழக்குகளை வாங்கிய வாகனங்களின் பட்டியலை போக்குவரத்து போலீஸார் வெளியிட்டனர். அப்போது நூற்றுக்கணக்கில் வழக்குகள் பதிவாகிய வாகனங்களின் ஓனர்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூருவை சேர்ந்த மாலா என்பவர் சுடுகாட்டில் பணியாற்றி வருகிறார். அவர் ஸ்கூட்டர் ஒன்றை பிரதானமாக பயன்படுத்தி வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு போலீஸார் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளனர்.



அதில் மாலாவின் ஸ்கூட்டி மீது சுமார் 634 சாலை விதி மீறல் வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும், அதற்கான அபராதம் 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அவரது ஸ்கூட்டரை போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.


இதனால் அதிர்ச்சியடைந்த மாலாவும் அவரது கணவரும் போக்குவரத்து காவல் துறையினரை நேரில் சந்தித்து ஏன் இந்த அபராதம் விதிக்கப்பட்டது என கேட்டுள்ளனர். அப்போது மாலா பெரும்பாலும் போனில் பேசிக்கொண்டே ஸ்கூட்டரை ஓட்டியதாகவும், ஹெல்மெட் அணியாமல் சென்றதாகவும், டிராப்பிக் சிக்னலை மதிக்காமல் போனதாகவும் 634 வழக்குகள் பதிவாகி இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். 



மேலும், அபராத தொகையான 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் கட்டினால் தான் ஸ்கூட்டியை தருவோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதேபோன்று பெங்களூருவை சேர்ந்த கூலித்தொழிலாளியான ஏழுமலை என்பவரின் ஸ்கூட்டரையும் போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.


மேலும், அவர் மீது 255 வழக்குகள் பதிவாகியிருந்தது  . இதற்காக சுமார் 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 



ஆனால் ஏழுமலை, 10,000 ரூபாய் மட்டுமே செலுத்தி, 20 வழக்குகளை தீர்த்துள்ளார். இதனால் முழு அபராதத்தையும் விதிக்கக் கூறி பெங்களூரு போக்குவரத்து போலீசார், அவரது ஸ்கூட்டரை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


வாகனம் ஓட்டும்போது வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்
செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
வாகன பதிவு சான்றிதழ் (படிவம் 23)
செல்லுபடியாகும் வாகன காப்பீட்டு சான்றிதழ்
அனுமதி மற்றும் வாகனத்தின் தகுதிச் சான்றிதழ் (போக்குவரத்து வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்)


சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இந்திய சாலைகளில் பைக் ஓட்ட முடியாது. முன்னதாக, லைசென்ஸ் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ₹500 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது, ​​உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ₹5000 ஆக உயர்ந்துள்ளது.


மேலும் படிக்க | ஏர்டெல் நிறுவனத்தின் பெஸ்ட் ஓடிடி பிளான்... தினமும் 3ஜிபி டேட்டா - விலை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ