GST மூலம் முதலீட்டாளர்களை அச்சுறுத்துதல், 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியகரமான செயல் என்று பாஜக மூத்த தலைவர் விமர்சித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு பெரிய வரி சீர்திருத்தமாகக் கருதப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனமான திட்டம் என மூத்த பாரதிய ஜனதா தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 2030-க்குள் நாடு 'வல்லரசாக' மாற 10% வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் நாடு முன்னேற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தனது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களுக்காக நாட்டின் மிகப் பெரிய சிவில் கௌரவமான பாரத ரத்னாவை வழங்க வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக்கொண்டார்.


பிரக்யா பாரதி ஏற்பாடு செய்த "India - an economic superpower by the year 2030"-ல் சுப்பிரமணியம் இந்த அறிக்கையை வெளியிட்டார். இந்த நேரத்தில் அவர் கூறுகையில், நாடு அவ்வப்போது 8% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டியிருந்தாலும், காங்கிரஸ் தலைவர் முன்வைத்த சீர்திருத்தங்கள் மேலும் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை என குறிப்பிட்டார்.


மாநிலங்களவை MP சுவாமி, "3.7% (முதலீட்டு பயன்பாட்டிற்கு தேவையான செயல்திறன் காரணி) எவ்வாறு அடைவோம்" என்றும் பேசினார். இதற்காக, நாம் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும், மற்ற முதலீட்டாளர்களுக்கு வெகுமதி வழங்கப்பட வேண்டும். வருமான வரி மற்றும் GST மூலம் முதலீட்டாளர்களை அச்சுறுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இது 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியகரமான செயல் என்றும் குறிப்பிட்டார்.