இந்திய ரிசர்வ் வங்கியின் இ-ரூபாய் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில், இந்திய வங்கிகள் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தைப் பயன்படுத்துவதற்கான சலுகைகளை வழங்குகின்றன. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் கேஷ்பேக், ரிவார்டு பாயிண்ட்கள் மற்றும் பல வழிகளில் இந்திய வங்கிகள் தொடர்ந்து டிஜிட்டல் பணபரிமாற்றத்தை ஊக்குவிக்கின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செப்டம்பரில், அதிக டிஜிட்டல் ரூபாய் பயனர்களை ஈர்ப்பதற்காக, நிகழ்நேர கட்டண நுழைவாயில் UPI (Unified Payment Interface)) உடன் இ-ரூபாய் (e-rupee) இணைக்கும் புதிய அம்சங்களை RBI அறிமுகப்படுத்தியது.


இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கடந்த ஆண்டு டிசம்பரில் இ-ரூபாய்க்கான ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியது, இந்த ஆண்டு இறுதிக்குள் தினசரி ஒரு மில்லியன் பரிவர்த்தனைகளை எட்டுவதை இலக்காகக் கொண்ட அந்தத் திட்டம் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இருந்தபோதிலும், தற்போதைய சில்லறை பரிவர்த்தனைகள் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்ற இலக்கை விட மிகக் குறைவாகவே உள்ளன. தற்போது, சராசரியாக நாளொன்றுக்கு 25,000 டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என்று இருப்பதால், ரிசர்வ் வங்கி, தற்போது திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த முயற்சிகளை எடுத்துள்ளது. இதற்கு பல்வேறு வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சலுகைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. 


மேலும் படிக்க | 8% வட்டி கொடுக்கும் வங்கிகளின் சிறப்பு FD... அக். 31 வரை மட்டுமே வாய்ப்பு..!!


ரிசர்வ் வங்கி தனது இ-ரூபாய் பயன்பாட்டை அதிகரிக்க விரும்புகிறது. இது மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயத்தை (CBDC) அதிகரிக்க பல்வேறு பயன்பாட்டு வழக்குகள் மற்றும் அம்சங்களை உள்ளடக்கி வருகிறது. இருப்பினும், இந்த நேரத்தில், அதன் இந்திய வங்கிகள் தங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு வழக்கமாக வழங்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.


2022-2023 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர அறிக்கையில், "2023-24 ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி (RBI) CBDC-சில்லறை மற்றும் CBDC-மொத்த விற்பனையில் பல்வேறு பயன்பாட்டு வழக்குகள் மற்றும் அம்சங்களை இணைப்பதன் மூலம்  விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது. 


இந்த ஆண்டு பட்ட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளை முன்னோக்கி எடுத்து, ரிசர்வ் வங்கி அதன் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை (CBDC) படிப்படியாக அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்கும் நிறுவனமான HDFC வங்கி, இ-ரூபாய் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய சலுகைகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது.


ஐசிஐசிஐ வங்கி மற்றும் யூனியன் வங்கி உள்ளிட்ட பிற வங்கிகளும் இதே போன்ற சலுகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், யெஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் போன்ற சிறிய தனியார் வங்கிகள் ஃபாஸ்ட்டேக் நெடுஞ்சாலை சுங்கவரி வசூல் அமைப்பு மூலம் பயண முன்பதிவுகள், மொபைல் ரீசார்ஜ்கள் மற்றும் கேஷ்பேக்குகளுக்கு ரிவார்டு புள்ளிகளை வழங்கி வருகின்றன. 


இருப்பினும் ரிசர்வ் வங்கியின் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என்ற இலக்கை நெருங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ரிசர்வ் வங்கி வேறு சில முன்முயற்சிகளையும் எடுக்கக்கூடும் என்று தெரிகிறது.


மேலும் படிக்க | பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை நிறுத்துகிறதா அரசு? பாஜகவின் எக்ஸ் பதிவு வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ