7வது ஊதியக் குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இறுதியாக, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்துள்ளது. புதன்கிழமை, அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதத்தை எட்டியது. ஆனால், பண்டிகைக் காலத்தில் மகிழ்ச்சி இத்துடன் நின்றுவிட்டதா? கண்டிப்பாக இல்லை!! மத்திய ஊழியர்களுக்கு இன்னும் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. வரும் நாட்களில் இன்னும் அற்புதமான பரிசுகளை அவர்கள் பெறவுள்ளார்கள்.
அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பு
ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிப்பு ஜூலை 1, 2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அடுத்த உயர்வு குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, ஏஐசிபிஐ குறியீட்டிற்கான எண்கள் இரண்டு மாதங்களுக்கு வந்துள்ளன. இதில் மிகப்பெரிய அதிகரிப்பு காணப்பட்டது. இருப்பினும், இது இறுதி அதிகரிப்பு அல்ல. இதற்கு 2024ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். ஏனெனில், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான பணவீக்க குறியீட்டு எண்கள் ஜனவரி 2024 -இல் டிஏ எவ்வளவு அதிகரிக்கும் என்பதை தீர்மானிக்கும். தற்போது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான எண்கள் வந்துள்ளன. இதிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.
இரண்டாவது பெரிய காரணம்
2024 ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படி பற்றிய விவாதத்திற்கு இரண்டாவது முக்கிய காரணம் 50 சதவீத டிஏ ஆகும். ஏனெனில், அகவிலைப்படி 50% -ஐ எட்டினால் அது பூஜ்ஜியமாக மாற்றப்படுவதற்கான விதிமுறை உள்ளது. அதன் பிறகு 50% அகவிலைப்படியின் தொகை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். 2024 ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலும் வரவுள்ளது. ஆகையால், இந்த நேரத்தில் ஊழியர்களை குஷிப்படுத்தும் விதமாக அரசு பெரிய பரிசை அளிக்கலாம். 50% அகவிலைப்படி ஊழியர்களின் ஊதியத்தில் இணைக்கப்பட்டால், சம்பளத்தில் குறைந்தபட்சம் ரூ.9,000 உயரும்.
AICPI குறியீட்டு எண்
தொழிலாளர் பணியகம் ஏஐசிபியை குறியீட்டு எண்களை (AICPI Index Numbers) வெளியிட்டுள்ளது. அதன் எண்கள் இரண்டு மாதங்களுக்கு (ஜூலை, ஆகஸ்ட்) வந்துள்ளன. செப்டம்பர் எண் அக்டோபர் 31 ஆம் தேதி வரும். தற்போது வரை குறியீடு 139.2 புள்ளிகளை எட்டியுள்ளது. இந்த அடிப்படையில் மொத்த DA 47.97% ஐ எட்டியுள்ளது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான எண்களின் அடிப்படையில், சமீபத்தில் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அப்போது மொத்த அகவிலைப்படி மதிப்பெண் 46.24 சதவீதமாக இருந்தது. இப்போது செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் எண்கள் 2024 ஜனவரியில் இருந்து எவ்வளவு அகவிலைப்படி அதிகரிக்கும் என்பதைத் தீர்மானிக்கும். ஜனவரி 2024க்குள் அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டும் என நிபுணர்களின் கூறுகிறார்கள்.
மேலும் படிக்க | 8% வட்டி கொடுக்கும் வங்கிகளின் சிறப்பு FD... அக். 31 வரை மட்டுமே வாய்ப்பு..!!
அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டினால் என்ன நடக்கும்?
7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) படி, மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டியவுடன், அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். அதாவது அகவிலைப்படியின் கணக்கீடு மீண்டும் 0 முதல் தொடங்கும். மேலும் 50 சதவீதத்தின்படி சம்பாதித்த தொகையானது அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்படும். 2016ஆம் ஆண்டு 7வது ஊதியக் குழுவை அமல்படுத்திய போது அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது. இப்போது அகவிலைப்படி (DA Hike) 50% -ஐ எட்டிய பிறகு அது மீண்டும் பூஜ்ஜியமாகத் திருத்தப்படும்.
சம்பளம் 9,000 ரூபாய் அதிகரிக்கும்
அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியவுடன், அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டு, 50 சதவீதம் வரையிலான தொகை அடிப்படை சம்பளத்துடன் அதாவது குறைந்தபட்ச சம்பளத்துடன் சேர்க்கப்படும். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 என்று வைத்துக்கொள்வோம், அப்போது அவருக்கு 50 சதவீத டிஏ, அதாவது ரூ.9,000 கூடுதலாக கிடைக்கும். ஆனால், அகவிலைப்படி 50 சதவீதமாக இருந்தால், இது அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்பட்டு அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும்.
அகவிலைப்படி ஏன் பூஜ்ஜியமாக்கப்படுகிறது?
புதிய ஊதிய விகிதத்தை அமல்படுத்தும் போதெல்லாம், ஊழியர்கள் பெறும் டிஏ அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படுகிறது. விதிப்படி, ஊழியர்கள் பெறும் 100 சதவீத டிஏவை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும், ஆனால் இது சாத்தியமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நிதி நிலைமை குறுக்கே வரும். இருப்பினும், இது 2016 இல் செய்யப்பட்டது. அதற்கு முன், 2006ல், ஆறாவது ஊதியக்குழு வந்த போது, ஐந்தாவது ஊதியக்குழுவில், டிசம்பர் வரை, 187 சதவீத டி.ஏ., வழங்கப்பட்டு வந்தது. அகவிலைப்படி முழுவதும் அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்பட்டது. எனவே ஆறாவது ஊதிய விகிதத்தின் குணகம் 1.87 ஆக இருந்தது. பின்னர் புதிய ஊதியக்குழு மற்றும் புதிய தர ஊதியமும் உருவாக்கப்பட்டது. ஆனால், அதை வழங்க மூன்று ஆண்டுகள் ஆனது.
மேலும் படிக்க | புதிய பண பரிமாற்ற கொள்கை: இனி பெயரை இதை செய்யாமலேயே ரூ. 5 லட்சம் வரை அனுப்பலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ