புதுடெல்லி: ஆபரண நகை பிராண்டு நிறுவனம் தனீஷ்க் மீண்டும் சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. #boycotttanishq என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் பிரபலமாகிவிட்டது. சென்ற மாதம் தான் மத நல்லிணக்கம் என்ற கருவின் அடிப்படையில் வெளியான ஒரு விளம்பரம் ஏற்படுத்திய சர்ச்சைக்கு பிறகு அந்த விளம்பரம் திரும்பப் பெறப்பட்டது.
இந்த முறை நெட்டிசன்களின் சீற்றத்திற்கு காரணம் புதிய தீபாவளி விளம்பரம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே இந்த சீற்றம் வெளியாகிறது. தனிஷ்க் பிராண்டின் தீபாவளிக்கான புதிய விளம்பரத்தின் பெயர் ‘தனீஷ்கின் ஏகத்வம்’.  வெவ்வேறு கலை வடிவங்களின் ஒற்றுமையையும் பாரம்பரியத்தையும் ஆராதிக்கும் விளம்பரம் இது. புதிய விளம்பரத்தில் ஆல்யா, நீனா குப்தா மற்றும் நிம்ரத் கவுர் ஆகியோருடன் சயானி குப்தாவும் நடித்துள்ளார்.


இவர்கள் அனைவரும் வெவ்வேறு கலைகளின் பிரதிநிதிகளாக, தனித்துவத்தை பறைசாற்றுகின்றனர். நடிகை சயானி கூறும் ஒரு வாசகமே குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. 
பட்டாசு இல்லாத தீபாவளியை விளம்பரப்படுத்துகிறார் சயானி. “நிச்சயமாக பட்டாசுகள் இல்லை, யாரும் பட்டாசுகளை வெடிக்கவேண்டாம். நிறைய விளக்குகள், நிறைய சிரிப்பு, நம்பிக்கையுடனும் நேர்மறையுடனும் இருப்போம்”என்ற நேர்மறையான வரிகள் தான் சர்ச்சையின் அடிநாதமாக மாறிவிட்டது. 


மீண்டும் நவம்பர் 8 ஆம் தேதி டிவிட்டரில் பதிவிட்ட சயானி, பட்டாசு இல்லாத, தூய்மையான தீபாவளியை ஊக்குவிக்கும் பதிவைப்போட்டார். “இந்த தீபாவளியில் பட்டாசு வெடிக்க வேண்டாம். அதற்கு பயன்படுத்தும் 5, 20, 200, 2000 ரூபாயை இனிப்பு, மிட்டாய் போன்றவற்றை வாங்கி, அதை வாங்க முடியாதவர்களுக்கு பரிசாகக் கொடுங்கள் அவர்களுக்கு இரண்டு விளக்குகளை வாங்குங்கள். கையில் காசே இல்லாத அவர்களும் இது ஒரு சிறப்பு நாள் என்று உணரச் செய்யுங்கள். அவர்களின் மகிழ்ச்சியை நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று பாருங்கள்" என்று எழுதியிருந்தார்.


 



ஒரு மாதத்திற்கு முன்புதான், டாடா குழுமம் 55 விநாடிகள் கொண்ட தனிஷ்க் விளம்பரத்தை திரும்பப் பெறத் தேர்வு செய்தது, இது ஒரு முஸ்லீம் மாமியார் தனது கர்ப்பிணி இந்து மருமகளை கவனித்துக்கொள்வதைக் காட்டியது. இந்த விளம்பரம் ஆன்லைனில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிருப்தி அதிகமானதை அந்த 55 விநாடி வீடியோவை யூடியூபில் இருந்து தனிஷ்க் நிறுவனம் நீக்கியது.



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR