புதுடெல்லி: மதுபான தொழிலுக்கு நல்ல செய்தி கொடுத்த ஜிஎஸ்டி கவுன்சில், GSTயில் இருந்து கூடுதல் நடுநிலை மதுவுக்கு அரசு விலக்கு அளிக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூடுதல் நடுநிலை ஆல்கஹால் (Extra Neutral Alcohol தானியம் சார்ந்த மற்றும் வெல்லப்பாகு அடிப்படையிலான மது) என்ற வகையில் வரும் மதுபானங்கள் தயாரிக்கும் போது ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க ஒப்புதல் அளித்தது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில், தினை மாவு உணவு தயாரிப்புகளுக்கான ஜிஎஸ்டியை தற்போதைய 18% ஜிஎஸ்டியில் இருந்து 5% ஆக குறைக்க முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று கூடிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில், கூடுதல் நடுநிலை ஆல்கஹால் (இஎன்ஏ) (தானிய அடிப்படையிலான மற்றும் வெல்லப்பாகு அடிப்படையிலான ஈஎன்ஏ) மதுபானங்கள் தயாரிக்கும் போது ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க ஒப்புதல் அளித்தது.


தொழில்துறை நோக்கங்களுக்காக மாநிலங்கள் ENAக்கு (தானிய அடிப்படையிலான மற்றும் வெல்லப்பாகு அடிப்படையிலான) VAT இல் இருந்து விலக்கு அளிக்கும் என்றும் கவுன்சில் ஒப்புக்கொண்டது. 


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ரயில்வே வெளியிட்ட செம டூர் பேக்கேஜ்.. இதோ அப்டேட்


டெல்லியில் ஜிஎஸ்டி கூட்டம்


ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. மாதந்தோறும் ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


ஜிஎஸ்டி விகிதங்கள் தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன. தற்போது ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றுடன் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவது முடிவுக்கு வரும் நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் ரேஸ் கோர்ஸ் மீதான வரிவிதிப்பை 52வது கூட்டத்தில் மாநிலங்கள் எழுப்ப வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங் நுழைவு மட்டத்தில் பந்தயங்களின் முக மதிப்பில் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று கூறியது. இந்த முடிவின்படி, ஜிஎஸ்டி அதிகாரிகள் பல ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு வரி வசூலிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் இருந்த 295 ரூபாய் காணவில்லையா... இது உங்களுக்கான எச்சரிக்கை!


அரசாங்கத்தின் இந்த முடிவினால் செலுத்த வேண்டிய வரி அதிகமானதால், கேமிங் துறை பின்னடைவைச் சந்தித்தது. எனவே, ஆன்லைன் கேமிங்கிற்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வேண்டாம் என்று, இந்திய பேண்டஸி ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பு (Federation of Indian Fantasy Sports (FIFS))  அரசாங்கத்தை வலியுறுத்தியது.


டேட்டா சென்டர்களுக்கு வரி விதிப்பு?


டேட்டா சென்டர் சேவைகளை ஏற்றுமதியாகக் கருதி, வெளிநாட்டு வாடிக்கையாளரின் சேவை ஜிஎஸ்டிக்கு உட்பட்டது அல்ல என்று ஒரு தெளிவுபடுத்தல் சுற்றறிக்கையை வெளியிட வாய்ப்புள்ளது என்றும், டேட்டா சென்டர்கள் வாடகைக்கு இடம் வழங்குவதற்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படலாம் என்றும், அதற்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதம் பொருந்தும் என்றும் அறிவுறுத்தலாம் என்றும் நம்பப்படுகிறது.  


கடந்த ஜிஎஸ்டி கவுன்சில்: முக்கிய முடிவுகள் 


கடந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்பளம் போன்ற பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதையடுத்து இந்தக் கூட்டத்தில் தினை போன்ற சில பொருட்களுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளது.


கடந்த கூட்டத்தில் இஸ்ரோ (ISRO), நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) மற்றும் ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (Antrix Corporation Limited) மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதள சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.  


கேசினோக்கள், குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் கேமிங் ஆகியவற்றின் வரிவிதிப்பு குறித்து தெளிவுபடுத்துவதற்காக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டங்களில் திருத்தங்களுக்கு கவுன்சில் ஒப்புதல் அளித்தது.


மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற கவலை வேண்டாம்... LIC வழங்கும் அச்சதலான ஜீவன் சாந்தி திட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ