2000 Rupee Note Exchange Deadline: புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ரூ.2,000 (2000 Rupee Note) இளஞ்சிவப்பு நோட்டுகள் உங்களிடம் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. உண்மையில், இன்று அதாவது அக்டோபர் 7, 2023, இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யவோ அல்லது மற்ற மதிப்புள்ள நோட்டுகளுடன் மாற்றவோ கடைசித் தேதியாகும். இந்தக் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதற்குப் பிறகும், உங்களிடம் நோட்டுகள் அப்படியே இருந்தால், பின்னர் அவை குப்பை போல மாறும். இந்த முக்கியமான பணியை முடிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முன்னதாக 30 செப்டம்பர் 2023 வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது.
96% இளஞ்சிவப்பு நிற 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளன
ரிசர்வ் வங்கி அளித்த ஒரு வார கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. செப்டம்பர் 30 அன்று தகவல் அளித்த மத்திய வங்கி, நாட்டின் மிகப் பெரிய மதிப்பிலான கரன்சி நோட்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டபோது, மார்ச் 31, 2023 வரையிலான தரவுகளின்படி, நாட்டில் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் சந்தையில் இருந்தன என்று ரிசர்வ் வங்கி கூறியது. ஆனால் செப்டம்பர் 29 ஆம் தேதிக்குள், இந்த நோட்டுகளில் 96 சதவீதம் வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் மூலம் திருப்பி வந்துல்லாணா என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.3.43 லட்சம் கோடி. இதுநாள் வரை மீதமுள்ள ரூ.0.14 லட்சம் கோடி சந்தையில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இந்த நோட்டுகளை திரும்பப் பெற அக்டோபர் 7-ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்திருந்தது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு எது பெஸ்ட்.. போஸ்ட் ஆபீஸ் RD ஆ? எஸ்பிஐ RD ஆ?
காலக்கெடு முடிந்த நிலையில் அடுத்தது என்ன
வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்கள் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதோடு, இந்த கடைசி தேதி முடிந்த பிறகு மீதமுள்ள நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான வசதியையும் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. ஆம், அக்டோபர் 7க்குப் பிறகும் இந்த நோட்டுகள் உங்களிடம் இருந்தால், கவலைப்பட வேண்டாம், ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின்படி இவற்றையும் டெபாசிட் செய்யலாம். இந்நிலையில் இந்த நோட்டுகளை வங்கிக்கு சென்று டெபாசிட் செய்ய முடியாது என்றும், அக்டோபர் 7ம் தேதிக்கு பிறகும் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 20,000 ரூபாய்க்கு மேல் உள்ள நோட்டுகளை ஒரே நேரத்தில் மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மே மாதம் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது
இந்த ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே 19ஆம் தேதி அறிவித்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு, மே 23, 2023 முதல், இந்த நோட்டுகளை அருகிலுள்ள வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்கள் மூலம் திரும்பப் பெறும் வசதியும் கொடுக்கப்பட்டது. சுத்தமான நோட்டு கொள்கையின் கீழ் இந்த பெரிய நோட்டை தடை செய்ய மத்திய வங்கி முடிவு செய்திருந்தது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்த நோட்டுகள் நடைமுறைக்கு வந்தன
2,000 ரூபாய் நோட்டு நவம்பர் 2016 இல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. புழக்கத்தில் உள்ள மிகப் பெரிய ரூபாய் நோட்டுகளான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக அரசு அறிவித்த போது புதிய 2000 ரூபாய் சந்தைக்கு வந்தது. பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, நிறுத்தப்பட்ட ரூ.500 நோட்டுக்குப் பதிலாக புதிய நோட்டை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, ரூ.1,000 நோட்டுக்குப் பதிலாக ரூ.2,000 நோட்டையும் வெளியிட்டது. இருப்பினும், பிற மதிப்புள்ள நோட்டுகள் போதுமான அளவு புழக்கத்தில் வந்ததால், 2018-19 ஆம் ஆண்டிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியது. இதற்குப் பிறகு, மே 19, 2023 அன்று, சுத்தமான நோட்டுக் கொள்கையின் கீழ் இந்தப் பெரிய நோட்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ரயில்வே வெளியிட்ட செம டூர் பேக்கேஜ்.. இதோ அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ