BSNL-ன் VRS ஓய்வு திட்டத்தை 78,569 ஊழியர்கள் தேர்வு செய்ததாக தகவல்!
சமீபத்தில் BSNL அறிவித்த தன்னார்வ ஓய்வு திட்டத்தை 78,569 ஊழியர்கள் தேர்வு செய்துள்ளதாக பொதுத்துறை நிறுவனம் தெரிவித்துள்ளது!
சமீபத்தில் BSNL அறிவித்த தன்னார்வ ஓய்வு திட்டத்தை 78,569 ஊழியர்கள் தேர்வு செய்துள்ளதாக பொதுத்துறை நிறுவனம் தெரிவித்துள்ளது!
செவ்வாயன்று, BSNL வெளியிட்ட செய்திகுறிப்பின் படி, நாட்டின் பெரிய பொதுத்துறை நிறுவனமான BSNL-ன் 78,569 ஊழியர்கள் தன்னார்வ ஓய்வு பெற்ற திட்டத்தை தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள காலகட்டத்தில் ரூ.1,300 கோடியை சம்பளத் தலைப்பில் சேமிக்க இயலும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2020 ஜனவரி 31 முதல் நடைமுறைக்கு வரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களைக் கருத்தில் கொண்டு ஒப்புதல் அளிப்பதே தங்கள் நோக்கம் எனவும் BSNL தலைவரும் மேலான்மை இயக்குநருமான பி.கே.பார்வார் தெரிவித்துள்ளார். மேலும் MTNL நிறுவனத்துடன் இணைவது குறித்து, பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகவும், இரு நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவின் கூட்டம் நடைப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பிலிருந்து நிறுவனத்தின் மீதான நியாயமான நிலுவைத் தொகை குறித்து, புர்வார், நிதி அழுத்த சூழ்நிலையைப் பார்க்கும்போது, அரசாங்கத்திடமிருந்து நிலுவைத் தொகையை மீட்டெடுப்பது அல்லது செலுத்த வேண்டிய தொகைக்கு சமமான தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
BSNL-ன் தன்னார்வ ஓய்வு திட்டத்தை 78,569 ஊழியர்கள் தேர்வு செய்துள்ளதாக அறிவித்தபோதிலும், முன்னதாக ஊழியர்களை மிரட்டி தன்னார்வ ஓய்வூதியம் (VRS) எடுக்க BSNL நிர்பந்திக்கப்படுவதாக குற்றம் சாட்டி, ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் முன்னர் ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் MTNL உடன் இணைவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப் பிறகு தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை BSNL அறிவித்தது.
VRS தேர்வுசெய்யும் ஊழியர்களுக்கு, நிறைவு செய்யப்பட்ட ஒவ்வொரு வருடத்திற்கும் 35 நாட்கள் சம்பளமும், ஒவ்வொரு ஆண்டும் சேவைக்கு 25 நாட்கள் சம்பளமும் அளிக்கப்படும் என BSNL தெரிவித்திருந்தது. ஆரம்பத்தில் BSNL-ன் இந்த VRS திட்டத்தினை 70,000-80,000 ஊழியர்கள் தேர்வு செய்வார்கள் என்று பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) எதிர்பார்த்தது. ஆனால் நிறுவனத்தின் முடிவுக்கு மாறாக இத்திட்டதினை 50 %-க்கும் மேற்பட்டோர் எதிர்த்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோய்வாய்ப்பட்ட இரண்டு அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக BSNL நிறுவனத்தை மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் (MTNL) உடன் இணைக்க அக்டோபர் 23 அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ், BSNL மற்றும் MTNL புதுப்பிக்க ரூ.29,937 கோடியை ஒதுக்கவும், அத்துடன் இருநிறுவன சொத்துக்கள் ரூ.38,000 கோடி பணமாக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதனுடன், VRS சலுகைக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது, அதற்கான செலவை பட்ஜெட் ஆதரவு மூலம் மத்திய அரசு ஏற்கும் எனவும் அறிவித்துள்ளது. 20,140 கோடி ரூபாய் மூலதன உட்செலுத்துதலால் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனத்திற்கு 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்க அரசு சமீபத்ததில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஸ்பெக்ட்ரத்திற்கான GST-யை ரூ.3,674 கோடி, இந்திய பட்ஜெட் வளங்கள் மூலம் இந்திய அரசு ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளளது. கூடுதலாக, அவர்களின் மறுமலர்ச்சிக்காக ரூ.15,000 கோடி இறையாண்மை பத்திரத்தை திரட்டவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.