Union Budget 2021: மத்திய பட்ஜெட் 2021-ல் ஆட்டோமொபைல் துறைக்கு பல நல்ல செய்திகள் வந்துள்ளன. தன்னார்வ வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையையும், அதிக பேருந்துகளைச் சேர்ப்பதன் மூலம் பொதுப் போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தையும் அறிமுகப்படுத்துவதற்கான மத்திய அரசின் முடிவாலும், நிதி பட்ஜெட் மூலம் உள்கட்டமைப்புத் துறையில் முதலீட்டை அதிகரிக்கும் முடிவாலும் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மிகுந்த உற்சாகமடைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019 முதல் விற்பனையில் கடும் மந்தநிலையை சந்தித்து வரும் வாகனத் துறை, வரவிருக்கும் ஆண்டுகளில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தை (Modi Government) வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmaa Sitharaman) பட்ஜெட் உரைக்கு பின்னர், அவர் அளித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, ஆடோமொபைல் பங்குகள் இன்று நன்றாக அதிகரித்தன. நாட்டின் முக்கிய வாகன நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்து வருகின்றன.


ALSO READ: Budget 2021: நிதி அமைச்சரின் பெரிய அறிவிப்பை எதிர்பார்த்திருக்கும் Middle Class


டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மாருதி சுசுகி, அசோக் லேலண்ட், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட ஆட்டோ பங்குகளில் ஏற்றம் கண்டுள்ளன. பட்ஜெட்டினால் பங்கு சந்தையும் மகிழ்ச்சி அடைந்திருப்பது பல்வேறு பங்குகளின் ஏற்றத்தினால் தெரிந்தது.


ஆட்டோ பங்குகளின் விலைகள்


டாடா மோட்டார்ஸ் பங்கு மதியம் 12 மணியளவில் 4 சதவீதம் லாபத்துடன் ரூ .108.75 க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இதேபோல், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகியின் (Maruti Suzuki) பங்குகளும் 1.30 சதவிகித லாபத்துடன் 7304 என்ற அளவில் வர்த்தகத்தில் இருந்தன. மஹிந்திரா & மஹிந்திராவின் பங்குகளைப் பற்றி பேசினால், அது, 4 சதவிகிதத்தை விட அதிகமாக அதிகரித்து 778 என்ற நிலைக்கு அருகில் வர்த்தகம் செய்யதது. அசோக் லேலண்டின் பங்கு 114 அளவில் 2.5 சதவிகித லாபத்துடன் வர்த்தகம் செய்யதது.


ALSO READ: 7th Pay Commission: அருமையான மத்திய அரசு வேலை வாய்ப்புகள், இன்றே விண்ணப்பிக்கவும்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR