Union Budget 2021: 2021 ஆம் ஆண்டின் பட்ஜெட் பிப்ரவரி 2 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில், அமைப்புசாரா துறையில் இருக்கும் மக்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை அரசாங்கம் வெளியிடக்கூடும். கடந்த பட்ஜெட்டிலும் சாமானிய மக்களுக்காக சிறப்பு திட்டங்களை மோடி அரசு கொண்டு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமைப்பு சாரா துறைகளுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள திட்டங்களில் ஒன்று அடல் ஓய்வூதியத் திட்டமாகும் (Atal Pension Yojana). இந்த திட்டம் குறிப்பாக அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) தரவுகளின்படி, அடல் ஓய்வூதிய திட்டத்தின் மொத்த பங்குதாரர்களின் எண்ணிக்கை 2.63 கோடியைத் தாண்டியுள்ளது.


அரசாங்கத்தின் இந்த ஓய்வூதிய திட்டத்தின் (Pension Scheme) கீழ், 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு 60 வயதிற்குப் பிறகு அதே நிலையான ஓய்வூதியத் தொகை கிடைக்கும். அல்லது பயனாளி மரணித்தால், அவரது மரணத்திற்குப் பிறகு அவரது வாழ்க்கைத் துணைக்கு அதே அளவிலான உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும்.


ALSO READ: Budget 2021: சாமானியரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா? எது விலை குறையும், எது கூடும்?


இது தவிர, பயனாளிக்கு 60 வயது ஆவதற்குள், அதுவரை சேமிக்கப்பட்ட ஓய்வூதிய நிதியை அவர் திரும்பப்பெறும் வசதியும் உள்ளது. APY இரண்டு நன்மைகளைக் கொண்டுள்ளது. முதல் நன்மை ஓய்வூதியம். இரண்டாவது நன்மை வருமான வரி விலக்கு. இந்த திட்டம் 60 வயது முதல் 1000 முதல் 5000 ரூபாய் வரை குறைந்தபட்ச உத்தரவாத மாத ஓய்வூதியத்தை வழங்குகிறது.


அமைப்புசாரா துறைக்கான ஓய்வூதிய திட்டம்


மோடி அரசாங்கம் 2015 இல் அடல் ஓய்வூதியட் திட்டத்தைத் தொடங்கியது. இது அமைப்புசாரா துறையின் மக்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். 40 வயதிலும் இந்த கணக்கை திறக்க முடியும்.


வரி விலக்கு நன்மை


நீங்கள் அடல் ஓய்வூதிய திட்ட கணக்கில் எந்த தொகையை டெபாசிட் செய்தாலும் அதற்கு வருமான வரி (Income Tax) தள்ளுபடி கிடைக்கும். இதற்காக, கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கான ரசீது காட்டப்பட வேண்டும்.


இது NPS-சிலிருந்து மாறுபட்டது


இந்த திட்டம் தேசிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து வேறுபட்ட திட்டமாகும். NPS-ல் 60 வயது வரை டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், அடல் ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வூதியம் ரூ .1,000 முதல் 5,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது பிரீமியத்தைப் பொறுத்தது.


ALSO READ: Budget 2021: விவசாயிகளுக்கு Good news காத்திருக்கிறது, வருமானம் அதிகரிக்கக்கூடும்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR