பட்ஜெட் 2023: சிகரெட் - பீடி விலையெல்லாம் உயரப்போகுது!
பட்ஜெட் 2023 விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அவற்றின் மீதான வரியை அதிகரிக்குமாறு வழக்கறிஞர் வர்ஷா தேஷ்பாண்டே மத்திய அரசுக்கு எழுதியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்லமலா சீத்தாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தயாரிப்புகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனால், பட்ஜெட்டில் யாருக்கெல்லாம் வரிச்சலுகை கிடைக்கும்? எந்தெந்த துறைகளில் எல்லாம் வரி அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புகையிலைப் பொருட்கள்
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வரும் பட்ஜெட்டில் அனைத்து புகையிலை பொருட்கள் மீதான வரியை அதிகரிக்க வேண்டும் என சமூக துறைகளில் பணியாற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓ) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக 2023-24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டுக்கு முன்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக செயல்படும் பல்வேறு அமைப்புகள் நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளன.
பெண்களின் ஆரோக்கியம்
குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் அமைப்பு (WCRO) கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் வர்ஷா தேஷ்பாண்டே, புகையிலைப் பொருட்கள் மீதான வரியை பன்மடங்கு அதிகரிக்குமாறு கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரியை அதிகரிப்பதால் புகையிலை பொருட்கள் விலை உயரும் என்று கடிதத்தில் கூறியுள்ள அவர், இது புகையிலை பொருட்களை உட்கொள்வதில் இருந்து பெண்கள் மற்றும் சிறுமிகளை தடுக்கும் என கூறியுள்ளார். மேலும், புகையிலை தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோயால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வலி மற்றும் துன்பத்திலிருந்து விடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
WCRO என்றால் என்ன?
WCRO என்பது சமூக அடிப்படையிலான அமைப்புகளின் கூட்டணியாகும். நாட்டின் எட்டு மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசங்களில் புகையிலை கட்டுப்பாடு உட்பட பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக இது செயல்படுகிறது.
பெண்கள் முன்னேற்றம்
உத்திரபிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள பெண் பீடி தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் உடல்நலம், கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்காக பாடுபடும் நாரி சேத்னா அறக்கட்டளையின் முன்னி பேகம், புகையிலை பொருட்கள் மீதான உயர்த்தப்பட்ட வரி வருவாயை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று எழுதியுள்ளார். மற்றும் குறிப்பாக பெண்கள் பீடி தொழிலாளர்களின் நலனுக்காக பயன்படுத்தலாம் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது
பெண்கள் புகையிலையை உட்கொள்வது இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இந்த அமைப்புகள் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளன. இதற்காக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செய்யப்பட்ட பல ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டியுள்ளன. புகையிலை உட்கொள்ளல் கர்ப்பத்தின் முடிவையும் பாதிக்கிறது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் ஆபத்து புகையிலை பயன்பாடு காரணமாக அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ