Budget 2024: இன்னும் சில நாட்களில் நாட்டின் நிதி அமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. மோடி அரசின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் ஜூலை 23 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இது என்பதால் இது குறித்த எதிர்பார்ப்புகளும் மிகவும் அதிகமாக உள்ளன. அனைத்து தரப்பு மக்களுக்கும் பல வித ஆசைகளும் நம்பிக்கையும் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பட்ஜெட்டில் சம்பள வர்க்கத்தினரும் (Salaried Class) விவசாயிகளும் மிகப்பெரிய அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். வருமான வரி விஷயத்தில் சாமானியர்களை மனதில் வைத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பல பெரிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் ரயில் பயணிகளுக்கான நம்பிக்கையும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக மூத்த குடிமக்கள் (Senior Citizens) ரயில் டிக்கெட் கட்டணத்தில் தங்களுக்கு கிடைத்து வந்த சலுகைகளை அரசாங்கம் மீண்டும் கொண்டுவரும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த சலுகைகளை அரசு மீண்டும் கொண்டு வந்தால் இது பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சி காலத்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக கருதப்படும். இதைத் தவிர பல புதிய ரயில்களுக்கான (New Trains) அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.


நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சலுகைகளா? 


கொரோனா நோய்த்தொற்றின்போது, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணங்களில் டிக்கெட் கட்டணத்தில் கிடைத்து வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த தள்ளுபடியின் கீழ் மூத்த குடிமக்களாக இருக்கும் பெண்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50%, ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு 40% தள்ளுபடி கிடைத்து வந்தது. தள்ளுபடி நிறுத்தப்பட்ட பிறகு அனைத்து பயணிகளும் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்ற நிலை வந்தது. வரவிருக்கும் பட்ஜெட்டில் மூத்த குடி மக்களுக்கு முன்னர் கிடைத்து வந்த தள்ளுபடி சலுகைகள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | 8th Pay Commission: DA, TA, HRA, பிற அலவன்சுகளில் அதிரடி ஏற்றம்... மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அபேட்


ஸ்லீப்பர் கிளாஸில் சலுகைகள்


கட்டணத்தில் அளிக்கப்படும் சலுகைகளை ஏசி கோச்சுகளுக்கு வழங்காமல் ஸ்லீப்பர் கிளாஸுக்கு வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகின்றது. ரயில்வேத் துறை (Railways) மீதான நிதிச் சுமையை முடிந்தவரை குறைக்க அரசு முயற்சித்து வருகிறது. மூத்த குடி மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே துறையின் வருவாய் அதிகரித்ததாக தகபல் அறியும் சட்டமான RTI மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் ரயில்வே துறை எட்டு கோடி மூத்த குடிமக்களின் மூலம் 5,062 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சலுகைகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக மட்டும் 2,242 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 


யாருக்கு பலன் கிடைக்கும்


மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை பெற விரும்பும் நபர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும் என ஊடக அறிக்கைகளில் பேசப்பட்டு வருகிறது. முன்னர் குறிப்பிடப்பட்ட வயது வரம்பை கடந்த பயணிகளுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டன. அதன்படி மூத்த குடிமக்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது முன்பதிவு படிவத்தில் அதற்கான இடத்தை நிரப்ப வேண்டும். இந்த சலுகையை மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.


நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி


சில நாட்களுக்கு முன்னர் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரயில்வே துறை அமைச்சர், பயணிகளின் கட்டணத்தில் ஏற்கனவே 59,837 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருவதாக கூறினார். ஒரு பயணியின் சராசரி செலவு 110 ரூபாய் என்றும், ஆனால் வசூலிக்கப்படும் தொகை 45 ரூபாயாக மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை மீண்டும் கொண்டு வருவது அரசுக்கு நிதிச் சுமையை அதிகரிக்கும் என்றும் ரயில்வே அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.


எனினும் இந்த மாதம் 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கான நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. இது தவிர பயணிகளின் வசதியை அதிகப்படுத்தும் வகையில் புதிய ரயில்களுக்கான அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. 


மேலும் படிக்க | ITR Filing: வருமான வரி செலுத்தும் நபரா நீங்கள்? வங்கிகளின் இந்த பட்டியல் உங்களுக்கு அவசியம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ