டெல்லியில் 11 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் முதல்வராக பதவியேற்றுள்ளார். இதற்கு முன்பு ஷீலா தீட்சித் டெல்லி முதல்வராக இருந்தார். அவருக்கு பிறகு ஆதிஷி மார்லினா தான் இந்த பொறுப்புக்கு வந்துள்ளார். ஆதிஷி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீண்ட கால நண்பர், அவர்கள் ஒன்றாக நிறைய வேலைகளை செய்து முடித்துள்ளனர். இருவரும் ஒரு வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் புத்திசாலிகளாக இருந்துள்ளனர். அதனால்தான் அக்கட்சி ஆதிஷியை டெல்லி முதல்வராக தேர்வு செய்துள்ளது. முதல்வர் அதிஷி மர்லினா வெளி நாடுகளில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளார்.
மேலும் படிக்க | பல துறைகளில் பட்டையை கிளப்பியவர்... டெல்லி முதல்வராகும் அதிஷி மர்லினா - யார் இவர்?
ஆம் ஆத்மி எம்எல்ஏவான அதிஷி மர்லினா 1981ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி டெல்லியில் பிறந்தார். அவரது அம்மாவின் பெயர் திரிப்தி வாஹி மற்றும் அவரது அப்பாவின் பெயர் விஜய் குமார் சிங். அதிஷி மர்லினாவின் தந்தை டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்தார். கார்ல் மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகிய இரண்டு பிரபலங்களின் பெயர்களைக் கலந்து "மார்லினா" என்ற பெயர் அவருக்கு வைக்கப்பட்டது. பின்னர் அவரது பெயரை அதிஷி மர்லினா என்று மாற்றினார். ஆதிஷி பஞ்சாபி ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தனது பள்ளி படிப்பை டெல்லியில் உள்ள ஸ்பிரிங்டேல் பள்ளியிலும், புனித ஸ்டீபன் கல்லூரியில் பட்டமும் பெற்றார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, ரோட்ஸ் ஸ்காலர்ஷிப் என்ற சிறப்பு உதவித்தொகையை வென்றா அவர் முதுகலைப் பட்டம் பெற லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.
பிறகு அதிஷி மர்லினா மத்திய பிரதேசத்தில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழு ஆண்டுகள் வசித்தார். அங்கு அவர் இயற்கை விவசாயம் மற்றும் புதிய கற்பித்தல் முறைகள் பற்றி கற்றுக்கொண்டார். அவர் அந்த நேரத்தில் பல இலாப நோக்கற்ற நிறுவனங்களுடன் பணியாற்றினார். அதிஷி 2012ல் அரசியல் பணி செய்ய தொடங்கினார். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்த இவர் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன உறுப்பினர் ஆவார். பிறகு 2019ல் தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் இவரை தோற்கடித்தார். அவர் வெற்றி பெறவில்லை என்றாலும், அவரது கட்சி அவரை நம்புகிறது. 2020ல் கல்காஜி சட்டமன்றத் வெற்றி பெற்றார். அதிஷியிடம் 1 கோடி பணம் இருந்தாலும், அவருக்கு சொந்தமாக வீடு, நிலம், நகை எதுவும் இல்லை.
அதிஷியின் மொத்த சொத்து மதிப்பு 1.41 கோடி ஆகும். 2020 சட்டமன்றத் தேர்தலின் போது அவரது சொத்து மதிப்பு 30 ஆயிரம் ரூபாய் ஆக இருந்தது. சுமார் 1.22 கோடி நிலையான வைப்பு எனப்படும் சிறப்பு சேமிப்பாக வங்கியில் உள்ளது. அவரிடம் பணம் இருந்தாலும், எந்த பங்குகளிலும் முதலீடு செய்யவில்லை. எல்ஐசி என்ற காப்பீட்டு நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறப்புத் திட்டத்தை வைத்துள்ளார்.
மேலும் படிக்க | அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவுக்கு பின் புதிய டெல்லி முதல்வர் அதிஷி சொன்னது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ