Budget 2024: இன்னும் சில நாட்களில், அதாவது ஜூலை 23 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் (Finance Minister) இந்த பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட் குறித்து பல எதிர்பார்ப்புகள் உள்ளன. பல தரப்பு மக்களும், தொழிதுறையினரும், ஊழியர் சங்கங்களும் பட்ஜெட்டுக்கான தங்களது கோரிக்கைகளை நிதி அமைச்சகத்திடம் வழங்கியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Union Budget 2024: சாமானிய மக்களின் வரிச்சுமை


இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்கள் (Common People) மீதான வருமான வரிச்சுமையை குறைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு நேரடி வரி வல்லுநர்களின் குழு (Direct Tax Perofessionals) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்திந்திய வரி பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு (AIFTP) தலைவர் நாராயண் ஜெயின் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.5 லட்சமாக அரசு உயர்த்த வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். நிதி இணக்கத்தை எளிதாக்க வரிக் கட்டமைப்பை எளிமையாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.


எந்த வரம்பிற்கு எவ்வளவு வரி? 


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு (Nirmala Sitharaman) அளித்த கடிதத்தில், ஜெயின், "5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீத வரியும், 20 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு 25 சதவீத வரியும் விதிக்கப்படலாம்" என்று கூறியுள்ளார். 


மேலும் படிக்க | PF தொகையை உங்கள் நிறுவனம் டெபாசிட் செய்யவில்லையா? இப்படி புகார் அளிக்கலாம்


கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை


கல்கத்தா குடிமக்கள் முன்முயற்சியின் தலைவராகவும் ஜெயின் உள்ளார். கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அவர், அவற்றைத் தொடர்வது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். கல்வி செஸ் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அரசாங்கம் போதுமான அளவு விளக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 


கல்வி, மருத்துவ வசதிகளை செய்து தருவது அரசின் அடிப்படைக் கடமை: ஜெயின்


விளக்கம் அளிக்கப்படாத பண வரவுகள், கடன்கள், முதலீடுகள் மற்றும் செலவினங்கள் மீது 115BBE பிரிவின் கீழ் வரி விகிதம் ஆகியவை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. மேலும் செஸ் வரி பற்றியும் இந்த குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விகிதம் அசல் 30 சதவீதத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என ஜெயின் கூறியுள்ளார். 


இப்படி பல வித கோரிக்கைகள் நிதி அமைச்சகத்திடம் வந்துள்ளன. வரி விதிப்பு முறை, வரி விலக்கு (Tax Exemption), வரி அடுக்குகளில் (Tax Slab)மாற்றம், பெண்களுக்கான சிறப்பு சலுகைகள், விவசாயிகளுக்கான சிறப்பு சலுகைகள், என பல வித அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.  நுகர்வை அதிகரிக்கும் நோக்கில் மோடி அரசாங்கம் புதிய வரி விதிப்பின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பை தற்போதுள்ள ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தலாம் என்றும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி அமைச்சகம் இறுதி முடிவுகளை எடுக்கும் முன் இந்த அனைத்து கோரிக்கைகளையும் கண்டிப்பாக பரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


மேலும் படிக்க | NPS முதலீட்டின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? முழு லிஸ்ட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ