PF தொகையை உங்கள் நிறுவனம் டெபாசிட் செய்யவில்லையா? இப்படி புகார் அளிக்கலாம்

EPF Balance Check: பல சமயங்களில், நிறுவனங்கள் ஊழியர்களின் கணக்குகளில் பிஎஃப் பணத்தை டெபாசிட் செய்வதில்லை. இந்த விஷயம் ஊழியர்களுக்கும் தெரியாமல் போய்விடுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 17, 2024, 03:17 PM IST
  • இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?
  • ஆன்லைனில் புகார் அளிப்பதற்கான வழிமுறை.
  • இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன?
PF தொகையை உங்கள் நிறுவனம் டெபாசிட் செய்யவில்லையா? இப்படி புகார் அளிக்கலாம் title=

EPF Balance Check: மாதா மாதம் இபிஎஃப் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இபிஎஃப் உறுப்பினர்கள் அனவரும் தங்களது பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஊதியத்தில் 12% -ஐ டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. இபிஎஃப் கணக்கில் சேமிக்கப்படும் தொகை, ஊழியர்களின் எதிர்காலத்திற்கான மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகின்றது.

நிறுவனத்தின் பிஎஃப் பங்களிப்பு

பல சமயங்களில், நிறுவனங்கள் ஊழியர்களின் கணக்குகளில் பிஎஃப் பணத்தை டெபாசிட் செய்வதில்லை. இந்த விஷயம் ஊழியர்களுக்கும் தெரியாமல் போய்விடுகிறது. ஆனால், நிறுவனம் பிஎஃப் கணக்கில் தனது பங்களிப்பை அளிக்கின்றதா என்பதை ஊழியர்கள் அவ்வப்போது பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி நிறுவனம் இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்யவில்லை என்றால், இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) அது குறித்தும் புகார் அளிக்கலாம். இதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.

இபிஎஃப்ஓ ஹெல்ப்லைன் (EPFO Helpline)

நிறுவனம் பிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவில்லை என்றால், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இபிஎஃப்ஓ ஹெல்ப்லைன் மூலம் புகார் செய்யலாம்.

ஆன்லைனில் புகார் அளிப்பதற்கான வழிமுறை இதோ:

- https://epfigms.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

- இங்கு உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

- இதன் பின்னர், ‘Register Grievance’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்,

- இதில் ‘Non-Deposit of PF’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

- இங்கே உங்கள் மற்றும் உங்கள் நிறுவனத்தின் விவரங்களுடன் கேட்கப்படும் பிற விவரங்களையும் அளிக்க வேண்டும்.

- அனைத்தையும் அளித்த பின்னர் ‘சப்மிட்’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

புகார் பதிவு செய்யப்பட்டவுடன், அதற்கான எண் உங்களுக்கு கிடைக்கும். அந்த எண்ணின் உதவியுடன் நீங்கள் ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் புகாரின் தற்போதைய நிலையை அறியலாம்.

மேலும் படிக்க | NPS முதலீட்டின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? முழு லிஸ்ட் இதோ

இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன?

நிறுவனத்திற்கு எதிராக நீங்கள் புகார் அளிக்கும்போது, உங்கள் கணக்கில் பிஎஃப் தொகை டெபாசிட் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, சில ஆவணங்களை ஆதாரமாக வைத்திருப்பது முக்கியமாகும். இதற்கு, ஆதாரமாக உங்கள் சம்பள சீட்டு அல்லது பிஎஃப் கணக்கு அறிக்கையையும் வைத்திருக்கலாம்.

இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?

ஆஃப்லைனில் பிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி? 

- ஆஃப்லைனில், பதிவு செய்யப்பட்ட உங்கள் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் (Missed Call) கொடுத்தோ, அல்லது 7738299899 என்ற எண்ணுக்கு "EPFOHO UAN" என்று  SMS அனுப்பியோ இபிஎஃப் சந்தாதாரர்கள் இபிஎஃப் இருப்பை செக் செய்யலாம். 

ஆன்லைனில் பிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?

- ஆன்லைனில் இபிஎஃப் இருப்பை (EPF Balance) செக் செய்ய, உமங் செயலி (UMANG App) அல்லது இபிஎஃப் இணையதளத்தை (EPFO Website) பயன்படுத்தலாம். 

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு, டிஏ அரியர், ஓபிஎஸ்: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News