Budget 2024: பட்ஜெட்டில் வட்டி விகிதங்கள் தொடர்பாக ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்ப்பார்ப்புகள் என்ன?
Union Budget 2024: இந்த பட்ஜெட்டில் வட்டி விகிதங்கள் தொடர்பான எதிர்ப்பார்ப்புகள் ஒவ்வொருத் துறையினருக்கும் வித்தியாசமாய் இருக்கும். ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்ப்பார்ப்புகள் என்ன?
Real Estate Expectations On Union Budget 2024: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரியல் எஸ்டேட் துறை 6 முதல் 8 சதவீதமாக உள்ளது. லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளிக்கிறது. மத்திய்ய பட்ஜெட் 2024க்கு முன்னதாக ரியல் எஸ்டேட் பங்குதாரர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி, துறையின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை வலியுறுத்துகின்றனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை வெளியிடத் தயாராகிக் கொண்டிருக்கிறார். ரியல் எஸ்டேட் துறை மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் கண்கள் வரும் நிதியாண்டில் தொழில்துறையின் பாதையை வடிவமைக்கும் நிதியமைச்சரின் முக்கியமான நடவடிக்கைகள் மீது குவிந்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் தொழில் நிலைக்கான நீண்டகால கோரிக்கையை, அந்தத் துறையை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கை தொழில்துறையின் அங்கீகாரம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதை வலியுறுத்துகின்றனர். அப்படி என்ன முக்கிய நடவடிக்கைகளை இந்த பட்ஜெட்டில் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்? தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | Gold Loan Tips: குறைந்த வட்டியில் நகைக்கடன் கொடுக்கும் ‘சில’ வங்கிகள்!
ரியல் டெவலப்பர்களுக்கு ஒரு முக்கியமான நேரத்தைச் சேமிக்கும் நடவடிக்கையாகக் கருதி, ஒற்றைச் சாளர அனுமதி முறையின் அவசியத்தை ரியல் எஸ்டேட் துறையினர் வலியுறுத்துகின்றனர். அதேபோல, தொழில்துறையினர் வரிச் சலுகைகளையும் எதிர்பார்க்கின்றனர்.
வீடுகளின் விலை குறைய வேண்டும் என்பது நோக்கம், மலிவு விலை வீடுகளுக்கான தேவை அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டும் தொழிலதிபர்கள், தொழில்துறையினர் மலிவு விலையில் வீடுகளை நோக்கி செல்ல அரசு உதவ வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
அதே நேரத்தில் வட்டி விகிதங்கள் தொடர்பாக எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது, அவை தற்போதைய சந்தைக்கு ஏற்றதாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. இந்தியப் பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சித் தூண் ரியல் எஸ்டேட் துறை என்பதும், தற்போது தொழிலின் நிலை, வட்டி விகிதங்களின் அடிப்படையில் செயல்படுவதை சுட்டிக்காட்டுகின்றனர்.
ரியல் எஸ்டேட் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமாக பங்களிக்கிறது, 6 முதல் 8 சதவீதம் வரை உள்ளது மற்றும் லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளிக்கிறது. வீட்டுக் கடனுக்கான, அசல் திருப்பிச் செலுத்துதலுக்கான தனிப் பிடித்தம், மலிவு விலையில் வீட்டுவசதிக்கான மறுவரையறை மற்றும் கார்பெட் ஏரியா வரம்புகள் உட்பட பல திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள்
1) நீண்ட கால மூலதன ஆதாய வரிவிதிப்பில் சீர்திருத்தங்கள்.
2) ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை (REIT) முதலீடுகளுக்கான விலக்குகள்.
3) ஒப்புதல் செயல்முறைகளை நெறிப்படுத்த ஒற்றைச் சாளர அனுமதி அமைப்பு அறிமுகம்.
4) வீடு வாங்குபவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பயனளிக்கும் வரிச் சலுகைகள்.
5) குறைந்த வட்டி விகிதங்கள்.
மலிவு விலை வீடுகளை நோக்கி மக்களை திசைதிருப்ப நிதியமைச்சர் என்ன செய்வார் என்று ரியல் எஸ்டேட் துறையினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க | Budget 2024: பட்ஜெட் பற்றி அனைவரும் அறிந்திருக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ