Budget 2024: பட்ஜெட் தேதி நெருங்கி வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. பொருளாதார மறுஆய்வுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். அடுத்த நாள் அதாவது பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பட்ஜெட்டை தாக்கல் செய்வார். மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் கடைசி பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் (Lok Sabha Election) நடக்க உள்ளது. தேர்தல் ஆண்டில் வருவதால் இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாகவும் (Interim Budget) இருக்கும். பட்ஜெட்டில் கவனத்தில் கொள்ளப்படும் சில முக்கிய அம்சங்களை பற்றி இங்கே காணலாம்.
இடைக்கால பட்ஜெட்டின் அளவு எப்படி இருக்கும்?
ஒவ்வொரு பட்ஜெட்டின் முதல் மற்றும் மிகப்பெரிய ஈர்ப்பு அதன் பட்ஜெட் அளவாகத்தான் இருக்கிறது. இது ஒருவகையில், நாட்டின் பொருளாதார வலிமையைப் பற்றிய ஒரு யோசனையையும் தருகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருந்தால், அதன் பட்ஜெட் அளவும், திட்டமிடலும் அதே அளவு பெரியதாக இருக்கும். 2014ஆம் ஆண்டு மோடி அரசின் முதல் ஆட்சிக் காலத்தில் முதல் பட்ஜெட் சுமார் 18 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதேசமயம், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அளவு 45 லட்சம் கோடி ரூபாய்.
பொருளாதாரத்தின் நிலை எப்படி இருக்கிறது?
நாட்டின் பொருளாதார நிலை குறித்த துல்லியமான யோசனையையும் பட்ஜெட் தருகிறது. பொருளாதாரத்தின் இரண்டு பெரிய குறிகாட்டிகள் உள்ளன - வளர்ச்சி விகிதம் (Growth Rate) மற்றும் நிதி பற்றாக்குறை (Fiscal Deficit). இம்மாதம், பட்ஜெட்டுக்கு முன், என்எஸ்ஓ (NSO) முதல் அட்வான்ஸ் எஸ்டிமேட்டை (Advance Estimate) வழங்கியது. இதில் நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முன் டிசம்பரில், ரிசர்வ் வங்கி (Reserve Bank) 7 சதவீத வளர்ச்சி விகிதத்தை மதிப்பிட்டிருந்தது. நிதிப் பற்றாக்குறையின் படி பார்த்தால், நடப்பு நிதியாண்டிற்கு கடந்த பட்ஜெட்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 5.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது. உண்மையான எண்ணிக்கை பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிகமாக இருக்கலாம்.
அரசாங்கத்தின் வருவாய்: வரி மற்றும் முதலீடு?
எந்தவொரு அரசாங்கமும் பட்ஜெட்டி வருவாய் மற்றும் செலவினங்களின் வரைபடத்தை முன்வைக்கிறது. அரசாங்கத்திற்கு இரண்டு முக்கிய வருமான ஆதாரங்கள் உள்ளன - வரி (Taxes) மற்றும் முதலீடு (Investment). வரி வருவாயின் அடிப்படையில் அரசாங்கம் பயனடையப் போகிறது என்றாலும், அது பங்கு விலக்கல் அடிப்படையில் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். வரி விவகாரத்தில், நடப்பு நிதியாண்டில் வருமான வரி (Income Tax) தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், ஜிஎஸ்டி வசூல் (GST Collection) பல முறை புதிய உயர்நிலைகளை எட்டியுள்ளது. வரி மூலம் சுமார் ரூ.24 லட்சம் கோடியும், பங்கு விலக்கல் மூலம் ரூ.51 ஆயிரம் கோடியும் திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.
மேலும் படிக்க | Gold Loan Tips: குறைந்த வட்டியில் நகைக்கடன் கொடுக்கும் ‘சில’ வங்கிகள்!
அரசின் மொத்தக் கடன் எவ்வளவு?
ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டில், வரி மற்றும் முதலீடு உட்பட மற்ற அனைத்து மூலங்களிலிருந்தும் மொத்த வருமானத்தை விட அதிகமாக செலவழிக்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் (Central Government) முன்வைக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட அரசாங்கம் சந்தையில் இருந்து கடன்களைப் பெறுகிறது. சமீபத்தில், அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட கடன் குறித்த IMF அறிக்கையால் ஒரு சர்ச்சை எழுந்தது. அதில் இந்தியாவிலும் மொத்த கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 100 சதவீதத்திற்கு மேல் செல்லக்கூடும் என்று அஞ்சப்பட்டது. பட்ஜெட்டில் இதுகுறித்த நிலவரங்கள் தெளிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு செலவாகும்?
இது பட்ஜெட்டின் (Budget) மிக முக்கியமான அம்சமாகும். எதிர்காலத்தில் அரசாங்கம் எப்படி, எங்கு, எவ்வளவு செலவழிக்கப் போகிறது என்பது பொருளாதாரத்தின் நிலை மற்றும் திசையைத் தீர்மானிக்கிறது. மோடி அரசாங்கத்தைப் பொறுத்த வரை, உள்கட்டமைப்புக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேபெக்ஸ் (CAPEX), அதாவது மூலதன செலவு (Capital Expenditure), பொருளாதாரத்தில் பல மடங்கு விளைவைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் கேபெக்ஸ் ரூ.10 லட்சம் கோடியாக இருந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ