Budget 2024: பிப்ரவரி 1 ஆம் தேதி நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். இன்னும் சில மாதங்களில் நாட்டின் மக்களவை தேர்தல் (Lok Sabha Election) நடக்கவுள்ள நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். புதிய ஆட்சி அமைந்த பிறகு முழுமையான பட்ஜெட் ஜுலை மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இது இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருப்பதால் பெரிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என கூறப்படுகின்றது. எனினும், தேர்தல் நேரத்தில் மக்களை மகிழ்விக்கும் வகையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectations)


நிதி அமைச்சர் அவர்களிடமிருந்து பல துறைகளை சார்ந்த மக்களுக்கு பல வகையான எதிர்பார்ப்புகள் உள்ளன. அந்த வகையில் ரியல் எஸ்டேட் துறையிலும் மக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை நிறுவனமான CREDAI, வீட்டுச் சொத்துகளுக்கான தேவையை அதிகரிக்க, அசல் தொகை மற்றும் வீட்டுக் கடனுக்கான (Home Loan) வட்டி செலுத்துதலுக்கான வரி விலக்கு வரம்பை (Tax Exemption Limit) அதிகரிக்க பட்ஜெட்டுக்கு முன்னதாக அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இந்திய ரியல் எஸ்டேட் (Real Estate) டெவலப்பர்கள் சங்கத்தின் கூட்டமைப்பும் (CREDAI) மலிவு விலை வீடுகளின் வரையறையில் மாற்றங்களைக் கோரியுள்ளது.


CREDAI ஆனது, வீட்டுக் கடன் (Home Loan) அசலைத் திருப்பிச் செலுத்துவதற்கான பிரிவு 80C-ன் கீழ் தற்போதுள்ள விலக்கு வரம்பை ரூ.1.5 லட்சத்தில் இருந்து அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. மாற்றாக, வீட்டுக் கடனின் அசல் திருப்பிச் செலுத்துவதற்கான விலக்கு தனி அல்லது ஒற்றை விலக்காகக் கருதப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி! இன்னும் 12 நாட்களில் முக்கிய அறிவிப்பு!


கிரடாயின் வேண்டுகோள்


மேலும், மலிவு விலை வீடுகள் என்ற வரையறை 2017ல் கொடுக்கப்பட்டதாகவும், அதன்பிறகு மாறவில்லை என்றும் CREDAI தெரிவித்துள்ளது. இதன்படி, மலிவு விலை வீடுகள் என்பது அதிகபட்சமாக ரூ.45 லட்சம் செலவில் கட்டப்படும் வீடுகளாகும். "கடந்த ஏழு ஆண்டுகளில் பணவீக்கம் காரணமாக ரியல் எஸ்டேட் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன" என்று CREDAI கூறுகிறது.


தேசிய வீட்டுவசதி வங்கியின் (NHB) தரவுகளின்படி, ஜூன் 2018 முதல் இந்தியாவில் வீட்டுவசதி விகிதங்கள் 24 சதவீதம் அதிகரித்துள்ளன. இதனால் டெவலப்பர்கள் தற்போதுள்ள ரூ.45 லட்சத்திற்கு இணங்குவது மிகவும் சாத்தியமற்றது. 


வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும்போது ரூ.5 லட்சம் வரை வரிவிலக்கு


இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (CREDAI) வீட்டுக் கடனுக்கான (Home Loan) வரி விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று கோருகிறது. தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டித் திருப்பிச் செலுத்துவதற்கான விலக்கு வரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது. இதை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது வட்டி விகிதங்கள் (Interest Rates) மிக அதிகமாக இருப்பதாக CREDAI நம்புகிறது. 2024ன் இரண்டாவது காலாண்டு வரை ரெப்போ விகிதத்தைக் குறைப்பது எளிதல்ல. இது வீட்டுக் கடனின் இஎம்ஐயில் (EMI) நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடு வாங்குபவர்கள் ஒவ்வொரு மாதமும் அதிக இஎம்ஐ செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கு வரி விலக்கு (Tax Exemption) அளிக்கப்பட்டால் அது மிகப்பெரிய உதவியாக இருக்கும். 


மேலும் படிக்க | அசத்தும் அரசு வங்கிகளின் சிறப்பான FD திட்டம்.. மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வருமானம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ