Budget 2025: இபிஎஸ் ஓய்வூதியத்தில் 5 மடங்கு அதிகரிப்பு, பட்ஜெட்டில் காத்திருக்கும் குட் நியூஸ்
EPS Pension: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழிலாளர் சங்கங்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். தொழிலாளர் அமைப்புகள் திங்களன்று EPFO இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஐந்து மடங்கு அதிகரித்து அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
EPFO Latest News: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட் குறித்து பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் தங்கள் பரிந்துரைகளை நிதி அமைச்சர் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு முன்வைத்துள்ளனர்.
Budget 2025 Expectations: தொழிலாளர் சங்கங்களுடன் ஆலோசனை
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழிலாளர் சங்கங்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். தொழிலாளர் அமைப்புகள் திங்களன்று EPFO இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஐந்து மடங்கு அதிகரித்து அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இதனுடன் எட்டாவது ஊதியக் குழுவை (8th Pay Commission) உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளன.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டுக்கு முன் நடத்திய கூட்டத்தில், தொழிற்சங்கத் தலைவர்கள் வருமான வரி விலக்கு வரம்பை ஆண்டுக்கு 10 லட்சமாக உயர்த்த வேண்டும், தற்காலிக ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் (TUCC) தேசிய பொதுச்செயலாளர் எஸ்.பி.திவாரி, கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் இது குறித்து பேசினார். அப்போது அவர், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உயர்த்த பெரும் பணக்காரர்கள் மீது கூடுதல் இரண்டு சதவீத வரி விதிக்க வேண்டும் என்றும் கூறினார். விவசாயத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இபிஎஃப்ஓ ஓய்வூதியம் (EPFO Pension)
EPF Members: தற்போது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச இபிஎஸ் ஓய்வூதியம் எவ்வளவு?
- தற்போது, EPFO-ன் கீழ் உள்ள இபிஎஃப் உறுப்பினர்களுக்கு, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (Employee Pension Scheme) 1995-ன் கீழ், குறைந்தபட்சம் 1,000 ரூபாய் மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
- இந்தத் தொகை 2014 இல் நிர்ணயம் செய்யப்பட்டது.
- அதன் பிறகு இந்த தொகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
- நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என தனியார் துறை ஊழியர்களிடமிருந்து தொடர்ச்சியாக பல கோரிக்கைகள் வந்துகொண்டு இருக்கின்றன.
EPS Subscribers: இபிஎஸ் சந்தாதாரர்களுக்கு ஓய்வூதியத்தை அதிகரிக்க கோரிக்கை
தற்போது பட்ஜெட் நேரத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்தை 5 மடங்கு உயர்த்தி ரூ.1,000 -இலிருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தவிர, அமைப்புசாராத் துறை தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புப் பலன்களை வழங்க, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் பணியாளர்கள் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (ESIC) ஆகியவற்றுக்கு தனி பட்ஜெட் ஒதுக்கீடு தேவை என்றும் நிதி அமைச்சகத்திடம் தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ