EPFO Update: UAN, PAN, இபிஎஃப் கணக்கு குறித்து அரசின் முக்கிய எச்சரிக்கை, கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

EPFO Update: ஊழியர்களின் EPFO ​​கணக்குகள் தொடர்பான ரகசிய தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என EPFO ​​அறிவுறுத்தியுள்ளது. இதில் UAN எண், கடவுச்சொல், பான் எண், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள், OTPகள் மற்றும் இது போன்ற விவரங்கள் அடங்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 8, 2025, 11:23 AM IST
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு.
  • EPFO தனது அதிகாரப்பூர்வ X கணக்கு மூலம் ஊழியர்களை எச்சரித்தது.
  • இபிஎஃப் சந்தாதாரர்கள் தாமதமின்றி புகாரை பதிவு செய்ய வேண்டும்.
EPFO Update: UAN, PAN, இபிஎஃப் கணக்கு குறித்து அரசின் முக்கிய எச்சரிக்கை, கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க title=

EPFO Update: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நாடு முழுவதும் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. நாடு முழுவதும் இணைய மோசடி வழக்குகள் அதிகரித்து வருவதால், ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் கோடிக்கணக்கான ஊழியர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு EPFO ​​வலியுறுத்தியுள்ளது.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஊழியர்களின் EPFO ​​கணக்குகள் தொடர்பான ரகசிய தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என EPFO ​​அறிவுறுத்தியுள்ளது. இதில் UAN எண், கடவுச்சொல், பான் எண், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள், OTPகள் மற்றும் இது போன்ற விவரங்கள் அடங்கும்.

EPFO தனது அதிகாரப்பூர்வ X கணக்கு மூலம் ஊழியர்களை எச்சரித்தது

EPFO சமூக ஊடக தளமான X இல் தனது அதிகாரப்பூர்வ கணக்கில் பதிவிட்டு முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, கணக்கு தொடர்பான எந்த விவரங்களையும் ஊழியர்களிடம் கேட்பதில்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. EPFO ஊழியர் என்று கூறிக்கொள்ளும் யாரும், உறுப்பினர்களின் UAN எண், கடவுச்சொல், PAN, ஆதார், வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது OTP போன்ற ரகசியத் தகவல்களை தொலைபேசி அழைப்பு, செய்தி, WhatsApp அல்லது மின்னஞ்சல் மூலம் கேட்டால், உறுப்பினர்கள் எந்த விவரங்களையும் வழங்கக்கூடாது என்றும் இபிஎஃப்ஓ கூறியுள்ளது.

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்கள் தாமதமின்றி புகாரை பதிவு செய்ய வேண்டும்

ஊழியர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்துள்ள பணத்தை திருட நினைக்கும் சைபர் கிரைமினல்கள், பல வழிகளில் பல வகையான தந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். EPFO ஊழியர் போல் காட்டிக்கொண்டு யாராவது உங்களைத் தொடர்புகொண்டு முக்கியமான தகவல்களைக் கோரினால், உடனடியாக புகாரைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் இபிஎஃப்ஓ உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக EPF கணக்கை ஆன்லைனில் அணுக சைபர் கஃபேக்கள் அல்லது பொது சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எப்போதும் தனிப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தவும்

EPFO தொடர்பான பணிகளுக்கு, ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட லேப்டாப், கணினி, டேப்லெட் அல்லது மொபைல் ஃபோனை எப்போதும் பயன்படுத்த வேண்டும். இது மோசடிக்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும், இதன் மூலம் நமது கணக்கு பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படுகின்றது. 

இபிஎஃப் உறுப்பினர்க்களின் நன்மைக்காக EPFO அதன் இணையதளம் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இணைய மோசடியில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்து ஊழியர்களுக்கு EPFO அவ்வப்போது வழிகாட்டுகிறது.

மேலும் படிக்க | Budget 2025: மூத்த குடிமக்களை மகிழ்விப்பாரா நிதி அமைச்சர்? இந்த முக்கிய அறிவிப்புகள் வரலாம்

மேலும் படிக்க | Budget 2025: எக்குத்தப்பாக எகிறப்போகும் தங்கத்தின் விலை... மனசு மாறிய மத்திய அரசு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News