Budget 2025: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2025 அன்று நாட்டின் அடுத்த மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். முன்னதாக, 23 ஜூலை 2024 அன்று தாக்கல் செய்யப்பட்ட 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர வகுப்பினருக்கு நிதி அமைச்சர் பெரிய நிவாரணம் அளித்தார். அப்போது, ​​ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் வரம்பை, 50,000 ரூபாயில் இருந்து, 75,000 ரூபாயாக அரசு உயர்த்தியது. புதிய வரி விதிப்பில் அரசு நிலையான விலக்கு வடிவில் இந்த நிவாரணத்தை வழங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Old Tax Regime


இதைத் திடர்ந்து, பழைய வரி விதிப்பு முறையிலும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஊதியம் பெறும் வகுப்பினர் (Salaried Class) நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது அடுத்த பட்ஜெட்டில் கருத்தில் கொள்ளப்படும் என கூறப்படுகின்றது. 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பணிகளுக்கான ஆயத்தப்பணிகளை நிதியமைச்சம் தொடங்கி விட்டது. இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் நிதியமைச்சர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.


Middle Class: பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு என்ன நன்மை இருக்கும்?


2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இம்முறை 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் எட்டாவது பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு என்ன ஸ்பெஷல்? இது தொடர்பாக நிதி அமைச்சகத்தில் விவாதம் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், நடுத்தர மக்களுக்கு மீண்டும் வருமான வரியில் நிவாரணம் வழங்க அரசு முழு முனைப்புடன் இருப்பதாக பல ஊடக அறிக்கைகளும் பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள். நடுத்தர வர்க்கத்தில், வருமான வரி செலுத்தும் சம்பளம் பெறும் வகுப்பினரின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | EPFO சூப்பர் செய்தி: இந்த உறுப்பினர்களுக்கு ரூ.50,000 கூடுதல் போனஸ், உங்களுக்கு கிடைக்குமா?


Standard Deduction: நிலையான விலக்கு வரம்பை அதிகரிக்க பரிசீலனை நடந்து வருகிறது


இம்முறை சம்பளம் பெறும் வகுப்பினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக, புதிய வருமான வரி முறையின் (New Tax Regime) கீழ், நிலையான விலக்கு வரம்பை அதிகரிக்க நிதியமைச்சகம் பரிசீலித்து வருவதாக நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி கூறுகிறது. நடப்பு நிதியாண்டில், புதிய வரி விதிப்பின் கீழ், சம்பளம் பெறும் வகுப்பினர் ரூ.75,000 நிலையான விலக்கின் பலனைப் பெறுகிறார்கள். இது தவிர, ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் புதிய வரி விதிப்பின் கீழ் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. இதில் மேலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.


பழைய வரி முறையில் நிவாரணம் கிடைக்குமா?


பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், சம்பளம் பெறும் வகுப்பினருக்கான நிலையான விலக்கு தொகை ரூ.75,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், வருமான வரியில் எந்த விதமான நிவாரணமாக இருந்தாலும், அதை புதிய வரி விதிப்பில்தான் அரசாங்கம் அளிக்கும் என கூறப்படுகின்றது. புதிய வரி முறையை அதிக கவர்ச்சிகரமானதாக்கவும், பழைய வரி முறையிலிருந்து மாற வரி செலுத்துவோரை ஊக்குவிக்கவும் புதிய வரி முறையில் அதிக சலுகைகள் அளிக்கபட்டு வருகின்றன. இதை நிதி அமைச்சகம் ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.


Union Budget 2025


2023-24 நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட எட்டு கோடி வருமான வரிக் கணக்குகளில், ஆண்டு வருமானம் ரூ.5 முதல் 10 லட்சம் வரையிலான ஐடிஆர்களின் எண்ணிக்கை 2.79 கோடி. இது தவிர, 10-20 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 89 லட்சம் ஐடிஆர்களை தாக்கல் செய்தனர். அதாவது வருமான வரியில் நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்தால், சுமார் மூன்று கோடி வரி செலுத்துவோரை மனதில் வைத்து இந்த நிவாரணத்தை வழங்கலாம்.


மேலும் படிக்க | இன்றைய பங்குச் சந்தை சென்செக்ஸ், நிஃப்டி 50 பங்குகள் தலா 1% ஏற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ