Union Budget 2025: இன்னும் 2 நாட்களில், அதாவது  பிப்ரவரி 1 ஆம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பலதரப்பட்ட மக்களுக்கு இந்த பட்ஜெட் குறித்து பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. பிரத்யேக எதிர்பார்ப்புகளுடன் அனைத்து துறைகளும் ஆவலோடு காத்திருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்


பட்ஜெட் தாக்கல் நெருங்கிவரும் இந்த வேளையில் பட்ஜெட் குறித்த மக்களின் ஆர்வமும் அதிகரித்து வருகின்றது. பெண்கள், விவசாயிகள், மூத்த குடிமக்கள், வணிகர்கள், சம்பள வர்க்க மக்கள் என அனைவருக்கும் எதிர்பார்ப்புகளின் பட்டியல் நீளமாக உள்ளது. இவர்களில் மூத்த குடிமக்களுக்கான எதிர்பார்ப்புகள் என்ன? மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், மூத்த குடிமக்களுக்கு பட்ஜெட்டில் அளிக்கக்கூடிய முக்கிய பரிசுகள் என்ன? இவற்றை பற்றி  இந்த பதிவில் காணலாம்.


Senior Citizens: மூத்த குடிமக்கள் மீது சிறப்பு கவனம்


பொதுவாகவே பட்ஜெட்டிலும், மத்திய அரசின் திட்டமிடலிலும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகின்றது. இந்த பட்ஜெட்டில் மூத்த குடிமக்கள் மத்தியில் வரி விலக்குகள் மற்றும் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. மூத்த குடிமக்களுக்கு, சந்தை நிர்ணயம் செய்யும் விகிதத்தை விட அதிகமான வருமானம், நீண்ட கால மற்றும் ஆபத்து இல்லாத வருமானத்தை வழங்கும் சேமிப்பு திட்டங்கள் ஆகியவை இருக்க வேண்டும் என்பதில் நிதியமைச்சர்கள் பல ஆண்டுகளாக கவனம் செலுத்தி வந்துள்ளனர். 


Tax Exemptions: எதிர்பார்க்கப்படும் வரி விலக்குகள்


Tax Filing: வரி தாக்கல்


75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வருமானம், ஓய்வூதியம் மற்றும் அவர்களின் ஓய்வூதியம் வரவு வைக்கப்படும் அதே குறிப்பிட்ட வங்கியில் இருந்து பெறப்பட்ட வட்டியாக மட்டுமே இருந்தால், வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.


இதுபோன்ற சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட வங்கி மூலத்தில் வரி விலக்கைக் கையாளுகிறது. இதனால் வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டிய தேவை நீக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டிற்கான வயது வரம்பை 70 ஆண்டுகளாகக் குறைப்பது, மூத்த குடிமக்களில் இன்னும் அதிகமானவர்களுக்கு இந்த பலனை நீட்டிக்கும். இந்த பட்ஜெட்டில் இந்த வயது வரம்பு குறைக்கப்படும் என நம்பப்படுகின்றது.


Increase in Basic Exemption Limit: அடிப்படை விலக்கு வரம்பு அதிகரிப்பு


- புதிய வரி முறையில் அடிப்படை விலக்கு வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவது, விலக்குகளுக்கான வரம்பை திருத்துவது, பெருநகரங்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) இன் கீழ் சலுகைகளை அதிகரிப்பது ஆகியவை முக்கிய எதிர்பார்ப்புகளாக உள்ளன. 


- தற்போது, ​​பழைய வரி முறை (Old Tax Regime) மற்றும் புதிய வரி முறை (New Tax Regime) இரண்டிலும் மூத்த குடிமக்களுக்கான அடிப்படை விலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உள்ளது.


- சூப்பர் மூத்த குடிமக்கள், அதாவது 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு (Super Senior Citizens) பழைய வரி முறையின் கீழ் மட்டும் ரூ.5 லட்சம் விலக்கு கிடைக்கிறது. 


- அரசாங்கம் இந்த வரம்பை கணிசமாக உயர்த்தக்கூடும் என்ற வெகுவாக நம்பப்படுகின்றது.


-  சில நிபுணர்கள் இந்த வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என கூறுகிறார்கள்.


- பணி ஓய்வு காரணமாக பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்கள் மீதான வரிச்சுமையைக் குறைக்க  இது நல்ல வழியாக இருக்கும்.


Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு வரி விலக்கு


மூத்த குடிமக்கள் மீதான நிதிச் சுமையைக் குறைக்க, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), 2024 இன் கீழ் ஈட்டப்படும் வட்டியில் வரி விலக்குகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாஙம் அறிமுகப்படுத்தலாம் என நம்பப்படுகின்றது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்ற மூத்த குடிமக்களுக்கான திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குவது அவற்றை மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு விருப்பங்களாக மாற்றக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.


2025 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மூத்த குடிமக்கள் தங்கள் தனித்துவமான நிதி சவால்களை நிவர்த்தி செய்யும் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதிகரித்த வரி விலக்குகள், சேமிப்புத் திட்டங்களுக்கான அதிக வட்டி போன்ற அறிவிப்புகள் வந்தால், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் அவர்களுக்கு கணிசமான நிவாரணம் கிடைக்கும்.


மேலும் படிக்க | வீட்டில் முதியவர்கள் இருந்தால்... இந்த FD திட்டத்தை உடனே போடுங்க - அதிக வட்டி கிடைக்கும்!


மேலும் படிக்க | இந்தியாவின் 62% பணக்காரர்கள்... இதில் தான் முதலீடு செய்ய திட்டமிடுகின்றனர்.. அறிக்கையில் வெளியான தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ