Budget 2025: வருமான வரி உள்ளிட்ட பல பெரிய சீர்திருத்தங்கள்.. தயாராகும் அரசு
Budget 2025: இந்த பெட்ஜெட்டில் அரசாங்கம் பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என நம்பப்படுகின்றது. நிதி அமைச்சகம் பெரிய சீர்திருத்தங்களுக்கு தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Budget 2025: நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த பெட்ஜெட்டில் அரசாங்கம் பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என நம்பப்படுகின்றது. நிதி அமைச்சகம் பெரிய சீர்திருத்தங்களுக்கு தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Union Budget 2025: பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன
- வருமான வரிச் சட்டத்தில் (Income Tax Act) அரசு விரிவான ஆய்வு நடத்தி வருகிறது.
- சுங்கச் சட்டத்திலும் (Customs Act) மாற்றங்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- பல பொருட்களின் வரி விகிதங்களில் மாற்றம் ஏற்படலாம்.
- இந்த நடவடிக்கைகள் வரி தொடர்பான சட்டங்களை எளிதாக்க உதவும்.
நவீன மற்றும் உலகளாவிய தரநிலைகளின்படி வரி தொடர்பான விதிகள் மற்றும் சட்டங்களை உருவாக்க அரசாங்கம் விரும்புகிறது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) ஆர்வம் காட்டி வருகிறார். இது தொடர்பாக நிதி அமைச்சகம் அதிகாரிகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும் விரிவான பேச்சுவார்த்தை நடந்தி வருகிறது.
Finance Minister: செயலாளர்களுடன் பேசிய நிதி அமைச்சர்
2025 பட்ஜெட்டில் பெரிய சீர்திருத்தங்கள் அறிவிக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சகத்தின் அனைத்து செயலாளர்களிடமும் பேசியுள்ளார். அப்போது பட்ஜெட்டில் முக்கிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. 2024-25 பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வு செய்வது குறித்து அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது.
இதற்கு வருமான வரித்துறை தலைமை ஆணையர் வி.கே.குப்தா தலைமையில் உள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் கீழ் 22 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டம் தொடர்பான பல அம்சங்களைப் பரிசீலிப்பதே இந்த குழுவின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமானியர்களின் கருத்தையும் அரசு கேட்டுள்ளது
இந்த விவகாரம் தொடர்பாக நிபுணர்களிடம் இருந்து துணைக் குழு கருத்துகளை கேட்டு வருகிறது. இது தொடர்பாக பொது மக்களின் கருத்தையும் நிதி அமைச்சகம் கேட்டுள்ளது. இதற்காக, அக்டோபர் 6 ஆம் தேதி ஒரு போர்டல் தொடங்கப்பட்டது. இந்த போர்டலில் இதுவரை 6,500 -க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் கிடைத்துள்ளன. வருமான வரி சட்டத்தை எளிமைப்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. மிகவும் பழைய விதிகளை ரத்து செய்ய அரசு விரும்புகிறது. இந்த மாற்றங்கள் வரி முறையை நவீனப்படுத்தவும் உதவும்.
Customs Duty: பல பொருட்களின் சுங்க வரியில் மாற்றம் ஏற்படும்
- அரசாங்கம் பல பொருட்களின் சுங்க வரி விகிதங்களை மாற்ற விரும்புகிறது.
- இதை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அரசு அறிவித்திருந்தது.
- கட்டணக் கட்டமைப்பை எளிமையாக்கி அதன் மூலம் டியூடி இன்வர்ஷன் பிரச்சனையை அகற்ற அரசாங்கம் விரும்புகிறது.
- இது சுங்க வரி தொடர்பான சிக்கல்கள் மற்றும் தகராறுகளின் வழக்குகளைக் குறைக்கும்.
Inverted Duty: இன்வர்டட் டியூடி என்றால் என்ன?
மூலப் பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட இறுதி பொருளை காட்டிலும், மூலப்பொருட்களின் மீதான வரி அதிகமாக இருக்கும் சூழ்நிலையை இன்வர்டட் டியூட்டி அல்லது டியூடி இன்வர்ஷன் என கூறுகிறோம். இது பல முரண்பாடுகளை உருவாக்குகிறது.
மேலும் படிக்க | SIP: மாதம் ரூ.1000 போதும்... சாமானியரும் கோடீஸ்வரர் ஆக உதவும் பரஸ்பர நிதிய முதலீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ