Union Budget 225: பிப்ரவரி மாதம் நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பலதரப்பட்ட மக்களுக்கும் இந்த பட்ஜெட் தொடர்பான பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. பட்ஜெட் தாக்கலுக்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டன. நிதி அமைச்சரும், நிதி அமைச்சக அதிகாரிகளும் பல்வேறு துறைகளை சார்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்திய அரசாங்கத்தின் முக்கிய துறைகளில் ஒன்றாக உள்ள ரயில்வே துறைக்கு பட்ஜெட்டில் உள்ள எதிர்பார்ப்புகள் என்ன? அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ரயில்வே


இந்திய ரயில்வே இந்தியப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகின்றது. இது தேசிய ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்கில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்திய மக்களின் பயணம், போக்குவரத்து ஆகியவற்றில் இன்றியமையாத அம்சமாக இருக்கும் ரயில்வே துறை அதன் உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய ரயில்கள், ரயில் நிலைய கட்டிடங்கள், ஓய்வறைகள் போன்றவற்றை மறுவடிவமைத்து, அதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த 24 மணி நேரமும் உழைத்து வருகிறது.


இதன் விளைவாக, ரயில்வே துறைக்கு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த கணிசமான நிதி உதவி தேவைப்படுகின்றது. இல்லையெனில், அது நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும். 2024-25 நிதியாண்டிற்கான நிகர வருவாயின் பட்ஜெட் மதிப்பீடு (BE) ரூ.2800 கோடியாக வைக்கப்பட்டுள்ளது. 2022-23 மற்றும் 2023-24 நிதியாண்டில், இந்திய ரயில்வேயின் நிகர வருவாய் மிகக் குறைவு.


Indian Railways: நிகர வருவாய் குறைந்தது ஏன்? 


பயணிகள் பிரிவில் இருந்து வரும் வருவாய் குறைந்ததே இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் என ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், சரக்கு வருவாய் மதிப்பீடு ரூ.1,80,000 கோடியாக இருந்த நிலையில், பயணிகளின் வருவாய்க்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.80,000 கோடியாக வைக்கப்பட்டுள்ளது.


Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள் என்ன? ரயில் பயணம் காஸ்ட்லி ஆகுமா?


சமூக சேவைக் கடமைகள் காரணமாக ரயில்வே துறைக்கு குறைவான கட்டணங்களால் இழப்பு ஏற்படுகிறது. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஏழை மக்களின் முக்கிய போக்குவரத்து சாதனமாக ரயில்வே உள்ளது. இழப்பை ஈடுசெய்ய, தேசிய போக்குவரத்து நிறுவனம் ரயில்களின் கட்டண அமைப்பை மதிப்பாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வேக்கான நாடாளுமன்றக் குழு, வெவ்வேறு ரயில்கள் மற்றும் வகுப்புகளில் அதன் பயணிகள் கட்டணங்கள் குறித்து விரிவான மதிப்பாய்வு செய்ய ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்தியதை அடுத்து, ரயில்வே கட்டணங்களில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு CGHS நிவாரணம்: மருத்துவமனைகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்


நாடாளுமன்ற குழு வெளியிட்டுள்ள முக்கிய குறிப்புகள்


- நாடாளுமன்ற குழு தனது அறிக்கையில், 'பொது வகுப்பு' அதாவது ஜெனரல் கிளாஸ் பயணம் வெகுஜனங்களுக்கு மலிவு விலையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
- ஆனால் அதே நேரத்தில் பயணிகள் ரயில்களின் கட்டண இழப்பைக் குறைக்க ஏசி வகுப்புகளின் கட்டணங்களில் மாற்றங்களை செய்வதை பற்றி மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய ரயில்வேயை கமிட்டி வலியுறுத்துகிறது. 
- பயணிகள் ரயில்களுக்கான அதன் இயக்கச் செலவுகள் குறித்து விரிவான மறுஆய்வு நடத்தவும் குழு பரிந்துரைத்துள்ளது.
- பயணிகள் ரயில்களுக்கான டிக்கெட் விலைகள் வெகுஜனங்களுக்கு கட்டுப்படியாகும் வகையில் உள்ளதா என்பதை உறுதிசெய்ய பல்வேறு பிரிவு பயண கட்டணங்களை மீண்டும் மதிப்பாய்வு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Common Man: பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்ன?


- ரயில் பயணங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.
- விபத்துகளை குறைக்க வேண்டும்.
- குறிப்பிட்ட வழித்தடங்களில் அதிக ரயில்கள்.
- விடுமுறை காலங்கள், வார இறுதி நாட்களில் அதிக ரயில்கள்
- கட்டண குறைப்பு
- ரயிலில் கிடைக்கும் உணவு, கழிப்பிட வசதிகளின் மேம்பாடு.


மேலும் படிக்க | தனியார் துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்: ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்... பட்ஜெட்டில் அறிவிப்பா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ