EPFO Wage Ceiling Hike: பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். வரும் நாட்களில் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றில் ஒன்று ஊதிய உச்சவரம்பில் மாற்றம். இதை பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு புத்தாண்டில் காத்திருக்கும் பரிசு
புத்தாண்டில் நாட்டின் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு அரசாங்கம் ஒரு பெரிய பரிசை வழங்கப் போகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனியார் துறை ஊழியர்களுக்கு சாதகமாக அரசின் ஒரு முடிவு வர உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இது குறித்து வெளியாகவில்லை.
Budget 2025: பட்ஜெட்டில் 2025 -இல் அறிவிப்பு வெளியாகலாம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 2025-26 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கு இபிஎஃப் ஊதிய உச்சவரம்பு தொடர்பான மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைக்கப் போவதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
Wage Celing Hike: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்
இப்போது வரை ஊழியர்களுக்கு ஓய்வூதிய கணக்கீட்டுக்கான அடிப்படை சம்பளம் ரூ. 15,000 ஆக உள்ளது. இந்த வரம்பை ரூ.21,000 ஆக உயர்த்த அரசு தயாராகி வருகிறது. இது நடந்தால், ஊழியர்களுக்கு பெரிய அளவிலான நன்மைகள் கிடைக்கும்.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கான முடிவு விரைவில்
- அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- ஓய்வூதிய கணக்கீட்டிற்கான தற்போதுள்ள ரூ.15,000 சம்பள வரம்பை ரூ.21,000 ஆக உயர்த்த தொழிலாளர் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
- சம்பள வரம்பு உயர்த்தப்பட்டால், தனியார் துறை ஊழியர்களுக்கு பெரிய அளவிலான பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2014 முதல், அதாவது கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக, இபிஎஸ் -ஸிற்கான (EPS) சம்பள வரம்பு ரூ.15,000 ஆக இருந்து வருகிறது.
- தற்போது இதை அதிகரிப்பதற்கான நேரம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
- இது தொடர்பான முடிவை அமைச்சகம் விரைவில் எடுக்கும் என நம்பப்படுகின்றது.
எனினும், இந்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த முடிவை 2025 பிப்ரவரியில், பட்ஜெட் தாக்கலின் போது அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.
EPF Contribution: இபிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கும்
சம்பள வரம்பு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டால் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் இபிஎப் பங்களிப்பு அதிகரிக்கும். இந்த திட்டத்தை அரசு நிறைவேற்றினால் ஓய்வூதிய தொகை உயர்த்தப்படும். இதனால், பணி ஓய்வுக்குப் பிறகு பணியாளர்களுக்கு அதிகப் பணம் கிடைக்கும். இது தவிர, சம்பள வரம்பு அதிகரிப்பால், அதிகமான ஊழியர்கள் அதன் அதிகார வரம்பிற்குள் வருவார்கள். இது பணியாளர்கள், இபிஎஃப்ஓ என இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் என நம்பப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ