மலிவான விலையில் ஸ்மார்ட்போன் Realme 7i அக்டோபர் 7 ஆம் தேதி  64MP கேமராவுடன் அறிமுகப்படுத்தப்படும். இதுடன் மேலும் பதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய ஸ்மார்ட்போன்  Realme 7i இன் சில அம்சங்களின் விவரங்களை ரியல்மீ ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. Qualcomm Snapdragon  662 சிப்செட் தொலைபேசியில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர, ரியல்மீ 7i இன் வலைத்தள பக்கத்தையும், அந்நிறுவனம் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. இதில் தொலைபேசியின் சிற்ப்பு அம்சங்களை குறிப்பிட்டுள்ளது.


Realme 7i  சிறப்பு அம்சங்கள் 
ரியல்மே 7i ஸ்மார்ட்போனை 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
 தொலைபேசியின் டிஸ்ப்ளே ரெஸல்யூஷன் 720 × 1,600 பிக்சல்களாகவும், ஸ்கிரீன் டு பாடி விகிதம் 90% ஆகவும், ரெஃப்ரெஷ் ரேட் 90 Hz ஆகவும் இருக்கும். ரியல்மீ 7i-ல் உள்ள ப்ரைமரி கேமரா 64 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைலட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் ப்ளாக் அண்ட் வொயிட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர். இந்த தொலைபேசியில் செல்ஃபிக்காக 16 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது.


ரியல்மீ 7i மற்றும் இரண்டு வயர்லெஸ் இயர்போன்களைத் தவிர, நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் ரியல்மீ 7 ப்ரோவின் Sun Kissed Leathe வேரியண்ட்டையும் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யும்


 ரியல்மே 7 ப்ரோ குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி, குவாட் ரியர் கேமரா மற்றும் 6.4 இன்ச் பன்ச் ஹோல்  AMOLED டிஸ்ப்ளேவுடன்   அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொலைபேசியில் 5000 mAh பேட்டரி இருக்கும், இது 18W கிக் சார்ஜ் பவர் உள்ளது.


வயர்லெஸ் இயர்போன்களும் அறிமுகப்படுத்தப்படும் ...
இது மட்டுமல்லாமல், அக்டோபர் 7 ஆம் தேதி, Realme Buds Air Pro வயர்செல் இயர்போன்கள் மற்றும் ரியல்மீ Buds Wireless புரோ பெக் பேண்ட் ஸ்டைல் வயர்லெஸ் இயர்போன்களையும் அறிமுகப்படுத்தும். 


ALSO READ | Password-ஐ ஹேக் செய்ய 10 நிமிடங்கள் போதும்... தடுக்க இன்றே இதை செய்யுங்கள்..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR