Share Market Bumper Return: மக்கள் பொதுவாக, தங்கள் வழக்கமான வருமானத்துடன் கூடுதல் வருமானத்தையும் ஈட்ட விரும்புகிறார்கள். இன்றைய காலகாட்டத்தில் அது தேவையாகவும் உள்ளது. நாளுக்கு நாள் செலவு அதிகரித்து வருகிறது. ஆனால், செலவு அதிகரிக்கும் அளவு நமது வரவு அதிகரிப்பதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படி ஒரு கூடுதல் வருமானத்தைப் பற்றி நினப்பவர்களுக்கு பங்குச் சந்தை (Share Market) ஒரு நல்ல வழிமுறையாக இருக்கும். பங்குச் சந்தையில் பல பெரிய பிரபலமான பங்குகளைப் பற்றி பெரும்பாலான மக்கள் அறிவார்கள். ஆனால், மிகவும் அமைதியாக இருந்து அதிரடியைக் கிளப்பும் சில பங்குகளும் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு பங்கைப் பற்றிதான் நாம் இன்று பார்க்கவுள்ளோம்.


அமைதியாக இருந்து அமர்க்களப்படுத்திய நிறுவனத்தின் பங்கு


பங்குச் சந்தையில் ஒரு பங்கு கடந்த ஒரு ஆண்டில் முதலீட்டாளர்களுக்கு 1200 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. CG Power & Industrial solutions நிறுவனத்தின் பங்கு தான் பங்குச்சந்தையின் அந்த அற்புத பங்காகும். கடந்த ஒரு வருடத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகளின் செயல்திறன் ஆச்சரியமளிக்கிறது.


ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.6.3 இருந்த பங்கு இன்று ரூ .82 ஆக உள்ளது


CG Power & Industrial solutions நிறுவனத்தின் பங்கு 2020 ஜூன் 3 அன்று ஒரு பங்கின் விலை (Share Price) ரூ .6.30 ஆக இருந்தது. இது ஒரு வருட காலத்தில் அதிகரித்து ஒரு பங்கிற்கு ரூ .82 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, இந்த பங்கு ஒரு வருடத்தில் 1200 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளது. அதே நேரத்தில் சென்செக்ஸ் இந்த ஒரு வருட காலத்தில் 53 சதவீதம் அதிகரித்துள்ளது. 


இந்த நிறுவனத்தின் பங்கில் ஒரு முதலீட்டாளர் 2020 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி ரூ .5 லட்சம் முதலீடு செய்திருந்தால், இன்று இந்த தொகை சுமார் 70 லட்சத்தில் இருக்கும். CG Power & Industrial solutions பங்கு இன்று ஒரு பங்கு ரூ .80-82 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.


ALSO READ: Binomo: வீட்டில் இருந்தவாறே கூடுதல் வருமானம் பெற அனுமதிப்பதுடன் புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருகிறது


இந்த ஆண்டு இதுவரை 90% அதிகரித்துள்ளது


இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து CG Power-ன் பங்கு 90% உயர்ந்துள்ளது. உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், எஃப்.பி.ஐக்கள், விளம்பரதாரர்கள் ஆகியோர் மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தில் தங்கள் பங்குகளை அதிகரித்துள்ளனர். பிசினஸ் டுடே என்ற ஆங்கில இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, CG Power-ல் உரிமை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று மார்வாடி ஷேர்ஸ் அண்ட் ஃபைனான்ஸின் ஜிதேஷ் ரனாவத் தெரிவித்துள்ளார். இதில் நடந்த மோசடிக்குப் பிறகு, நிறுவனம் முருகப்பா குழுமத்தால் (Murugappa group) கையகப்படுத்தப்பட்டது. 


புதிய நிர்வாகத்தையும் சந்தை வரவேற்றுள்ளது. மதிப்பீட்டு முன்னணியில் இது மிகவும் விலை உயர்ந்தது என்றாலும், ரூ .5000 கோடி வருவாய் புள்ளிவிவரங்கள் மற்றும் ஈபிஐடிடிஏ ரூ .500 கோடியின் மேலாண்மை வழிகாட்டுதலைக் கருத்தில் கொண்டால், இந்த நிறுவனம் மூலதன பொருட்கள் மற்றும் மின் துறையில் மிகவும் வலுவாக இருப்பதாக அவர் கூறினார்.


நிறுவனம் கடனைக் குறைத்தது


நிறுவனம் தனது கடனை பெரிய அளவில் குறைத்துள்ளது என்று அவர் கூறினார். 2020 டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனம் ரூ .534.59 கோடியை நஷ்டத்தில் இழந்தது. இது 2019 டிசம்பரில் ரூ .210.07 கோடியாக இருந்தது. நிகர விற்பனை 2020 டிசம்பர் காலாண்டில் 30.45 சதவீதம் சரிந்து ரூ .819.52 கோடியாக உள்ளது. இது 2019 டிசம்பரில் ரூ .1,178.32 கோடியாக இருந்தது. 


CG Power and Industrial Solutions Limited ஒரு பி 2 பி நிறுவனமாகும். இது இரண்டு வணிக வழிகளில் இயங்குகிறது. ஒன்று பவர் சிஸ்டம் வர்த்தக பிரிவு மற்றும் தொழில்துறை அமைப்பு வணிக பிரிவு. இந்த நிறுவனத்தை முருகப்பா குழுமத்தின் நிறுவனமான டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆப் இந்தியா 2020 நவம்பரில் 50.62 சதவிகித பங்குகளை வாங்கி கையகப்படுத்தியது.


ALSO READ: Mutual Funds: சிறிய முதலீட்டில் பெரிய லாபம் காண வேண்டுமா? இதுதான் அதற்கான வழி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR