SCSS: மூத்த குடிமக்களுக்கான அசத்தல் திட்டம்.. வட்டியிலேயே பம்பர் லாபம் காணலாம்
Senior Citizens Savings Schemes: பெரும்பாலான முதியவர்கள் ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் தொகையை ஒரு பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்து அதிக லாபத்தை ஈட்ட விரும்புகிறார்கள்.
Senior Citizens Savings Schemes: மனிதர்களாகிய நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. ஒவ்வொரு வயதிலும் மனிதர்களுக்கு ஒவ்வொரு விதமான தேவை இருக்கும். ஒரு குறிப்பிட்ட வயதானவுடன் நாம் பணத்தை ஈட்டுவது மிகவும் கடினமான ஒரு பணியாகிவிடும். இளமையிலேயே பணி ஓய்விற்கு பிறகான காலத்திற்காக சேமித்து வைப்பது நல்லது. நம் நாட்டில் மூத்த குடிமக்களுக்கான பல பிரத்யேக சேமிப்புத் திட்டங்கள் உள்ளன.
பெரும்பாலான முதியவர்கள் ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் தொகையை ஒரு பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்து அதிக லாபத்தை ஈட்ட விரும்புகிறார்கள். இதில் பலர் தங்கள் ஓய்வூதிய தொகையை வங்கிகளில் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டில் (Fixed Deposit) முதலீடு செய்கிறார்கள். மூத்த குடிமக்களின் FD முதலீட்டை ஊக்குவிக்க, பல வங்கிகள் அவர்களுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான வட்டியை வழங்குகின்றன.
நீங்களும் உங்கள் ஓய்வூதிய மூலதனத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய நினைத்தால், வங்கி FD -ஐ விட மேலான ஒரு திட்டம் உள்ளது என்பதை தெரிந்துகோள்ள வேண்டும். அதுதான் தபால் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS). இந்தத் திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) நல்ல வட்டி வழங்கப்படுகிறது. இதன் உதவியுடன் மூத்த குடிமக்கள் தங்கள் வைப்புத் தொகையை விரைவாக அதிகரிக்க முடியும். இந்த திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
5 ஆண்டுகளுக்கான முதலீடு
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் இதில் முதலீடு செய்யலாம். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மற்றும் விஆர்எஸ் எடுக்கும் சிவில் துறை அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பில் சில நிபந்தனைகளுடன் விலக்கு அளிக்கப்படுகிறது.
வட்டி மற்றும் வரி விலக்கும் கிடைக்கும்
தற்போது, தபால் துறையின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (Senior Citizens Saving Scheme) ஆண்டு வட்டியாக 8.2 சதவீதம் வழங்கப்படுகிறது.
இதன் வட்டி காலாண்டு அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 30 லட்சம் ரூபா வரை டெபாசிட் செய்யலாம். இதன் குறைந்தபட்ச முதலீடு 1000 ரூபாய் ஆகும். ஒவ்வொரு காலாண்டிலும் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டி வழங்கப்படுகிறது. தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டக் கணக்கை கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு மூடலாம். டெபாசிட் முதிர்ச்சியடைந்த பிறகு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் திட்டத்தின் பலன்களைத் தொடர விரும்பினால், கணக்குக் காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். கணக்கை நீட்டிப்பதற்கான நடவடிக்கைகளை கணக்கு முடிந்து ஒரு ஆண்டிற்குள் எடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடுகள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் பலன்களுக்குத் தகுதியுடையவை.
ரூ. 15 லட்சம் ரூ. 21,15,000 ஆக அதிகரிக்கும்
உங்கள் ஓய்வூதிய தொகை சேமிப்பை விரைவாக அதிகரிக்க விரும்பினால் இந்தத் திட்டm சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தில் ரூ.15 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால், தற்போதைய 8.2 சதவீத வட்டி விகிதத்தில், 5 ஆண்டுகளில் வெறும் வட்டியாக மட்டும் ரூ.6,15,000 கிடைக்கும். காலாண்டு அடிப்படையில் இந்த திட்டத்தில் கிடைக்கக்கூடிய வட்டி ரூ. 30,750 ஆக இருக்கும். இந்த வகையில் டெபாசிட் தொகையான ரூ. 5,00,000 மற்றும் வட்டித் தொகை ரூ. 6,15,000 சேர்த்து மொத்த முதிர்வுத் தொகை ரூ.21,15,000 ஆகும்.
மூத்த குடிமக்களுக்கான மிகவும் பாதுகாப்பான, அதிக லாபம் தரக்கூடிய ஒரு திட்டமாக இது கருதப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. முதலீடு செய்யும் முன் உங்கள் பொருளாதார ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
மேலும் படிக்க | கல்விக்கடன் வாங்க திட்டமா... குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் சில வங்கிகள் இவைதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ