Business ideas in india: வணிகத்தில் அதிக லாபம் சம்பாதிக்க, பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்வது அவசியம். இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள், கூலிக்கு செல்வதைக் காட்டிலும் சொந்த தொழில் செய்ய விரும்புகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே சிக்கல், பிஸ்னஸ் குறித்த சரியான தகவல் கிடைப்பதில்லை. அந்தவகையில் குறைந்த நேரத்தில், குறிப்பிட்ட தொழிலில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் மிகப்பெரிய அளவிலான வருமானத்தை ஈட்டலாம். இந்த தொழிலில் நீங்கள் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொழில் என்ன? 


முத்து சாகுபடி. இதற்கு உங்களுக்கு ஒரு குளம் தேவைப்படும். முத்து சாகுபடிக்கு மாநில அளவில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. குளம் இல்லை என்றால் அதற்கும் ஏற்பாடு செய்யலாம். இந்த தொழிலுக்கு தேவையான முதலீட்டில் அரசாங்கத்திடம் இருந்து 50 சதவீதம் வரை மானியம் பெறலாம். தென்னிந்தியா மற்றும் பீகாரில் உள்ள தர்பங்கா சிப்பிகளின் தரம் மிகவும் நன்றாக உள்ளது.


மானியம் கிடைக்க வழி


இப்பணிக்கு கிராமத் தலைவர் அல்லது செயலாளரை அணுகுங்கள். அவர்களின் ஆலோசனையின்பேரில் 50 சதவீத மானியமும் கிடைக்க ஏற்பாடு செய்யலாம். முத்து வளர்ப்பில் மக்களின் கவனம் வெகுவாக அதிகரித்து. இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றில், குஜராத் பகுதிகளில் அதன் சாகுபடியால் பல விவசாயிகள் லட்சபதிகளாக மாறியுள்ளனர்.


பயிற்சி அவசியம்


முத்து சாகுபடிக்கு திறமையான நிபுணர்களிடம் பயிற்சி எடுக்க வேண்டும். பல இடங்களில் அரசாங்கமே இலவசமாக பயிற்சியை அளிக்கிறது. அரசு நிறுவனங்கள் அல்லது மீனவர்களிடமிருந்து சிப்பிகளை வாங்கி விவசாயத்தைத் தொடங்குங்கள். முத்து சாகுபடி கூடுதல் தகவல்களை நீங்கள் பெற்று நன்றாக வளர்க்கும் பட்சத்தில் விரைவிலேயே நீங்கள் லட்சாதிபதியாகிவிட முடியும். 


மேலும் படிக்க | SBI கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூ.6 ஆயிரம்! நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்


மேலும் படிக்க | EPFO மூலம் ஓய்வூதிய நிலையை கண்டறிவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata