Cashback Credit Card: கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. எஸ்பிஐ கார்டு புதிய 'கேஷ்பேக் எஸ்பிஐ கார்டை' அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்டு இப்போது 5% வரை கேஷ்பேக் வழங்கும். சிறப்பு விஷயம் என்னவென்றால், கார்டுதாரர்கள் எந்த வணிகக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து ஆன்லைன் செலவினங்களிலும் 5% வரை கேஷ்பேக் பெற்றுக் கொள்ளலாம். சந்தையில் இன்னும் 5 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கும் கார்டுகள் உள்ளன. ஆனால் அவற்றில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட வணிகரிடம் பரிவர்த்தனை செய்யும் போது மட்டுமே 5% கேஷ்பேக் கிடைக்கும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வாங்கும் போது SBI கார்டில் இருந்து கேஷ்பேக் கிடைக்கும். இந்த கார்டில் மட்டும் அதிக கேஷ்பேக் கிடைக்கும். ஒரு வருடத்தில் 6 ஆயிரம் ரூபாய் வரை கேஷ்பேக் பெற முடியும்.
எப்படி விண்ணப்பிப்பது?
டயர்-II மற்றும் டயர்-III நகரங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் அப்ளிகேஷன் தளமான 'எஸ்பிஐ கார்டு ஸ்பிரிண்ட்' மூலம் வீட்டில் இருந்தே ’கேஷ்பேக்’ கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது தொடரான புதிய அறிவிப்பையும் எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. ஆப்லனில் விண்ணப்பிக்க நீங்கள் அலையத் தேவையில்லை. ஆன்லைனிலேயே நீங்கள் விண்ணபித்து பெற முடியும்.
மேலும் படிக்க | கிரெடிட் கார்டு தொகையை EMI ஆக மாற்றுவதால் யாருக்கு லாபம்? தெரிந்து கொள்ளுங்கள்
கார்டு கட்டணம் எவ்வளவு?
எஸ்பிஐ சிறப்பு சலுகையின் கீழ் மார்ச் 2023 வரை கார்டு கட்டணத்தை இலவசம். இதற்குப் பிறகு, ஒரு வருடத்திற்கான கார்டு புதுப்பித்தல் கட்டணம் 999 ரூபாயாகும். இருப்பினும், ஒரு வருடத்தில் இந்த அட்டையுடன் ரூ.2 லட்சம் செலவழித்தால், இந்த அட்டையை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.
கேஷ்பேக் எவ்வளவு வரும்?
எஸ்பிஐ அறிவிப்பின்படி, முதல் ஆண்டில் மார்ச் 2023 வரை காண்டாக்ட்லெஸ் கார்டு சிறப்பு சலுகையாக இலவசம். 'கேஷ்பேக் எஸ்பிஐ கார்டு' மூலம் ஆன்லைனில் ரூ.100 செலவழித்தால், 1% கேஷ்பேக் கிடைக்கும். மாதத்திற்கு ரூ.10,000 வரை ஆன்லைனில் வாங்கும் போது 5% வரை கேஷ்பேக் பெறலாம். அதாவது, இந்த அட்டை மூலம் ஒரு மாதத்தில் 10 ஆயிரம் ரூபாய் பரிவர்த்தனை செய்தால், ஒரு வருடத்தில் 6000 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். இந்த அட்டையில் உங்களுக்கு ஆட்டோ கிரெடிட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் ஆக்டிவேட் செய்தால் ஓரிரு நாட்களில் உங்கள் SBI கார்டு கணக்கில் கேஷ்பேக் கிடைக்கும்.
மேலும் படிக்க | கிரெடிட் கார்டு பிரச்சனையில் இருந்து விடுபட உங்களுக்கான யோசனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata