Business Idea: லட்சங்களில் வருமானத்தை தரும் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழில்!
Business Idea: அட்டைப்பெட்டியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. இதில் மந்த நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் மிக மிக குறைவு. ஆன்லைன் வர்த்தகம் பெரிய அளவில் செய்யப்படுவதே இதற்கு காரணம்.
Cardboard Box Manufacturing Business: இன்றைய காலகட்டத்தில் பலருக்கு, தொழில் செய்யும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பிறரிடம் கையேந்தாமல், நாலு பேருக்கு வேலை கொடுக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் தற்போது அதிகமாக காணப்படுகிறது. மத்திய அரசும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், முத்ரா திட்டங்கள் போன்ற பல கடன் திட்டங்கள் மூலம் எளிதாக கடனுதையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழில் (Business Idea), உங்களுக்கு பெரிய அளவில் லாபத்தை கொடுக்கும் தொழிலாக இருக்கும். தற்போது கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதை விட, ஆன்லைன் ஷாப்பிங் அதிகமாக உள்ளது. இதற்குப் பொருட்களை பேக்கிங் செய்ய சிறிய மற்றும் பெரிய அளவில் அட்டை பெட்டிகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. அது தவிர, கடைகளிலும் அட்டைப்பெட்டியின் தேவை இருக்கும். வாடிக்கையாளர் மத்தியிலும், பேக்கிங் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருக்கிறது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் டிமாண்ட்
அட்டைப் பெட்டியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. இதில் மந்த நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் மிக மிக குறைவு. ஆன்லைன் வர்த்தகம் பெரிய அளவில் செய்யப்படுவதே இதற்கு காரணம்.
அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான இடம் மற்றும் இயந்திரம்
புத்தகங்களுக்கு பைண்டிங் செய்ய பயன்படுத்தும் அட்டை என்னும் தடிமனான காகிதம் கொண்டு தயாரிக்கப்படும் அட்டை பெட்டிகளை தயாரிக்க, சுமார் 5 ஆயிரம் சதுர அடி அளவிற்கு இட வசதி இருக்க வேண்டும். மேலும் தயாரிக்கப்பட்ட அட்டைப்பெட்டிகளை சேமித்து வைக்க கிடங்கும் தேவை. நெரிசலான இடங்களில் இந்த தொழிலை தொடங்குவதை தவிர்க்க வேண்டும். அட்டைப் பெட்டிகளை தயாரிக்க இரு வகையான இயந்திரங்களை உங்கள் வசதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப பாய்ன்படுத்தலாம். ஒன்று தானியங்கி இயந்திரம். மற்றொன்று செமி ஆட்டோமேட்டிக் இயந்திரம்.
அட்டைப்பெட்டி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள்
அட்டைப் பெட்டி தயாரிக்க, கிராஃப்ட் பேப்பர் என்று அழைக்கப்படும் பைண்டிங் பேப்பர் முக்கியமாக தேவை. இதற்கான சந்தை விலை கிலோ ₹40 என கூறப்படுகிறது. நீங்கள் தரமான காகிதத்தை பயன்படுத்தினால், நல்ல தரமான அட்டைப்பெட்டியை தயாரிக்கலாம். இதன் மூலம் நல்ல விலையில் விற்கலாம்.
மேலும் படிக்க | பெண்கள் அதிக லாபம் பார்க்கும் தொழில்கள்! ‘இதை’ செய்தால் நீங்களும் ஆகலாம் Boss Lady!
அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலதனம்
அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிலை, சிறிய தொழிலாக தொடக்க விரும்புகிறீர்களா, அல்லது பெரிய அளவில் செய்ய விரும்புகிறீர்களா என்பதை பொறுத்து, முதலீட்ட்டின் அளவு மாறுபடும். அட்டைப்பெட்டி தயாரிக்க, செமி ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை பயன்படுத்தி தொடங்கும் போது, 20 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படும். அதே நேரத்தில் முழுமையான தானியங்கி இயந்திரம் கொண்டு தொடங்குவதற்கு, 50 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம்
அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். இதற்கான டிமாண்ட் எப்போதுமே அதிகமாக இருக்கும் என்பதால், உங்கள் தயாரிப்பை சிறந்த முறையில் சந்தைப்படுத்தி, நிரந்தர வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்தால், இந்த தொழில் மூலம் மாதம் தோறும் ரூபாய் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.
மேலும் படிக்க | சீக்கிரம் கோடீஸ்வரர் ஆக ஆசையா? அப்போ ‘இந்த’ தொழிலை செய்து பாருங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ