புதுடெல்லி:  பொட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மின்சார வாகனங்களுக்கு சிறந்த வகையில் சந்தை வாய்ப்புகள் உள்ளன எனக் கூறலாம். மேலும் இவை சுற்றூசூழலைக்கு உகந்த வாகனங்களாகவும் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மின்சார வாகன பிரியர்களுக்கு ஒரு நற்செய்தியாக, செயலி அடிப்படையிலான கேப் சேவை வழங்கும் நிறுவனமான ஓலா (OLA) அடுத்த ஆண்டு ஜனவரியில் மின்சார பைக்குகளை அறிமுகப்படுத்தவுள்ளது. நிறுவனம் தனது முதல் இ-ஸ்கூட்டரை ஜனவரி 2021 க்குள் சந்தையில் வழங்க உள்ளது. தொடக்கத்தில், நெதர்லாந்தில் உள்ள ஒரு ஆலையில் மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கப்படும். பின்னர் இது இந்தியா மற்றும் ஐரோப்பாவின் சந்தையில் விற்கப்படும்.


OLA  நிறுவனம் தற்சார்பு இந்தியா ( Aatmanirbhar Bharat) திட்டத்தின் கீழ் நாட்டில் தனது சொந்த ஆலையை அமைக்க திட்டமிட்டு வருகிறது.  நாட்டில் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த உள்ளது. இ ஸ்கூட்டரின் விலை நாட்டில் பெட்ரோல் ஸ்கூட்டருடன் போட்டியிடும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் இரண்டு கோடி இரு சக்கர விற்பனை சந்தையில் ஒரு முக்கிய பங்கைப் பெற நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.


மே மாதத்தில், ஓலா (OLA) ஆம்ஸ்டர்டாமில் உள்ள எடெர்கோ  (Etergo) பி.வி. ஓலா எலக்ட்ரிக் உற்பத்தி (OEM ) நிறுவனர் பவிஷ் அகர்வால் கூறுகையில், எடெர்கோவை கையகப்படுத்துவது OEM களின் பொறியியல் மற்றும் வடிவமைப்பு திறன்களை அதிகரிக்கும். எடெர்கோ ஒரு முழுமையான மின்சார பயன்பாட்டு ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளது. இதில்  மாற்றக்கூடிய பேட்டரிகள் பயன்படுத்துகின்றன. மேலும் 240 கிலோமீட்டர் வரை வேகம் வரை செல்லக்கூடியது. எதிர்காலத்தில், மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்றும், கோவிட் -19 பரவலுக்கு பின் மின்சார வாகனங்களுக்கான உலகளாவிய தேவை வேகமாக அதிகரிக்கும் என்றும் அகர்வால் கூறினார்.


ALSO READ | ரயில்வேயுடன் இணைந்து பிஸினஸ் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR