தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், ​​பலர் வீடு, நிலம் போன்ற சொத்துகளையும் வாகனங்களையும் வாங்க விரும்புகிறார்கள். சிலர் புதிய கார் அல்லது பிற வாகனங்களையும் வாங்குகிறார்கள். இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் கார் வாங்க வங்கியில் கடன் வாங்குகிறார்கள். பண்டிகை காலங்களில் வங்கிகளில் நல்ல கடன் சலுகைகளும் கிடைக்கும். நீங்களும் இந்த தீபாவளிக்கு கார் வாங்கத் திட்டமிட்டிருந்தால், கடன் வாங்கும்போது பலர் செய்யும் சில தவறுகளை செய்யாமல் இருப்பது அவசியமாகும். இல்லையெனில் நீங்கள் பின்னர் வருந்த வேண்டியிருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பூஜ்ஜிய டவுன்பேமண்ட்


பலர் கடன் வாங்கும்போது பல வித தவறுகளை செய்துவிடுகிறார்கள். பூஜ்ஜிய டவுண்பேமண்டுக்கான தவறாகும் இது. இதில், கார் வாங்கும் போது பணம் செலுத்த வேண்டியதில்லை, அனைத்து பணமும் EMI மூலம் செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​உங்கள் கடன் தொகை மிக அதிகமாக இருக்கும். 


அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் EMI செலுத்தும் போது அதிக வட்டியும் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, கார் வாங்கும் முன் ஒரு பெரிய தொகையை முன்பணமாக உங்களிடம் வைத்திருக்க முயற்சிக்கவும். நீங்கள் செலுத்தும் முன்பணம் அதிகமாக இருந்தால், உங்கள் கடன் தொகை குறைவாக இருக்கும்.


மேலும் படிக்க | ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிடும் நபரா நீங்கள்? இந்த முதலீட்டு திட்டம்தான் உங்களுக்கு ஏற்றது 


சிறிய EMIகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்


கடன் விஷயத்தில் சிறிய EMI-களின் தொந்தரவுகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சிறிய EMIகள் காரணமாக பல நேரங்களில் மக்கள் நீட்டிக்கப்பட்ட கடன் காலத்தை பெறுகிறார்கள். ஆனால் உங்களுக்கு இது லாபம் அல்ல, நஷ்டம், ஏனெனில் இதில் நீங்கள் கடனை விட அதிக பணம் செலுத்த வேண்டி இருக்கும்.


ஒரு பட்ஜெட் போட்டுக்கொள்ளுங்கள் 


எந்த ரேஞ்சில் கார் வாங்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு பட்ஜெட் போடுங்கள். பல நேரங்களில், சந்தையில் விலையுயர்ந்த மற்றும் கவர்ச்சிகரமான கார்களைப் பார்ப்பதனால், நம் மனம் மாறுவதுண்டு. இது உங்கள் பட்ஜெட்டையும் பாதிக்கும். ஆனால் உங்கள் பட்ஜெட் இறுதியானதாக இருந்தால், அதை நீங்கள் டீலரிடம் சொல்லாம். அதன் பின்னர் அவர் அதே வரம்பில் சிறந்த கார்களின் விருப்பத்தை உங்களுக்கு வழங்குவார். இதன் மூலம், நீங்கள் உங்கள் பட்ஜெட்டுக்குள் நல்ல காரை வாங்கலாம். மேலும், நீங்கள் எளிதாக இஎம்ஐ அளிக்கும் வகையில் உங்களுக்கு ஏற்ற அளவு கடனை வாங்கலாம். 


கிரெடிட் கார்ட் ஸ்கோர் 


உங்கள் கிரெடிட் கார்டு ஸ்கோரை பராமரிக்க முயற்சிக்கவும். கிரெடிட் கார்டு ஸ்கோரால் உங்கள் கடன் தவணையும் பாதிக்கப்படுகிறது. கிரெடிட் கார்ட் ஸ்கோர் குறைவாக இருந்தால், உங்களுக்கு குறைவான கடன் விருப்பங்கள் இருக்கும், மற்றும் தவணை அதிகமாக இருக்கும். மறுபுறம், கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால், குறைந்த வட்டியிலும் கடன் பெறலாம்.


மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்களே உஷார்!! இந்த கட்டணங்களை உயர்த்தியது வங்கி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ